பக்கம்:தரும தீபிகை 1.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 த ரும பிேகை

உள்ளம் உருகி எவ்வுயிர்க்கும் இாங்கி அருள்க : யாண்டும் மெய்யே பேசுக , அங்ானம் ஆயின் திவ்விய மகிமைகள் வாய்ந்து சீர்மை மிகப்பெறுவாய் என வருவாயைக் காட்டி உறுதி நலனை

உரிமையாக உணர்த்திய படி யிது.

82. மணியின் ஒளிபோல் மனிதன் குணத்தின்

குணியாய் அமைந்து குலவின்-அணியுலகம் போற்றி அவனைப் புகழ்ந்து பணிபலவும் ஆற்றி யருளும் அமர்ந்து. == (e-)

இ-ள் ஒளிமிகுந்த மணி போல் மனிதன் குணநலம் கிறைந்து நிலவின் உலகம் அவனைப் புகழ்ந்து போற்றி உவந்து பணிந்து உதவிகள் பல புரியும் என்றவாறு.

குணத்தால மகிமை வளரும் என முன்னம் வந்தது; இதில் மதிப்பு வரும் என்கின்றது. அது உள் வரவு; இது உலக வரவு. மணி என்றது மரகதம் மாணிக்கம் வயிாம் முதலிய சாதி இாத்தினங்களே. ஒளி இயல்புக்குத் தக்கபடி மணி விலை மதிக்கப் பெறுகின்றது. அதுபோல், குண நலன்களின் அளவே மனிதன் மதிப்பும் மாண்பும் பெறுகின்ருன்.

மணி மனிதனுக்கும், ஒளி குணத்திற்கும் ஒப்பாம். குணி என்றது குணத்தை யுடையது என்க. மனிதனை மணியோடு ஒப்ப வைக்கது அவனது இயல்பான உயர் நிலை கருதி. இழித்த கல்லுகளாய்க் கடைப்பட்டொழி யாமல் உயர்ந்த மணிகளாய் வந்தும் உரிய குணங்கள் இலவேல் அவை கழிக்கப்படுகின்றன; அவ்வாறே சிறந்த பிறப்பில் தோன் றியும் தகுந்த ர்ேமைகள் இலாேல் மக்கள் இழிக்கப்படுகின்றனர். ஒளி வாய்ந்த மணிகள் அழகிய் அணிகளாய் அமைந்து விழுமிய நிலையில் விளங்குதல்போல் குணலை முடைய மனிதர் பல கிலைகளிலும் சிறந்து உலகில் உயர்ந்து திகழ்வர் என்க.

கல்ல குணசீலனே உலகமெல்லாம் உவந்து கொண்டாடும்; அங்கலனே நீ விழைந்து பேணுக என்பது கருத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/97&oldid=1324667" இலிருந்து மீள்விக்கப்பட்டது