பக்கம்:தரும தீபிகை 2.pdf/1

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

28. தன்னம்பிக்கை. 393 சுதந்திரமான வாழ்க்கையே மனிதனுக்கு இயற்கை யுரிமை யாய் இதம் தருகின்றது. சுயம்பு சுயாதீனம் என்பன தெய்வத் தன்மைகளாம். கட வுள் ஒருவரே என்றும் நிரந்தரமான சுதந்திர நிலையினர். தெய்வ பிண்டமான மனிதனும் அந்நிலைமையைத் தழுவியுள்ள அளவே தலைமையில் மிளிர்கின்றான். “ Self-existence is the attribute of the Supreme cause, and it constitutes the measure of good by the degree in which it enters into all lower forms." (Emerson) எதையும் சாராத தனி நிலைமையே இறைவன் தன்மை யாம் ; அந்த இயல்பின் அளவே உயிர்களும் உயர் நலம் உறு கின்றன ” என்னும் இது ஈண்டு எண்ணத் தக்கது. பெருமை பிழையாது ஒழுகின் என்றது சிறுமை யாதும் நுழையாமல் சீர்மையுடன் வாழ்தலை. அவ் வாழ்வில் மேன்மையும் இன்பமும் மேவியுள்ளன ஆதலால் அதன் பான்மை உணரவந்தது. பிறருடைய மனம் போல் நடந்து ஏவலைச் செய்து வாழ்வது ஈனம் மிக வுடையது. அந்த ஊனம் அடையாதான் தன் மதிப் பாளனாய்த் தலை சிறந்து நிற்கின்றான். அவனுடைய பிறப்பும் இருப்பும் சிறப்புறுகின்றன. "How happy is he born and taught That serveth not another's willWhose armour is his honest thought, And simple truth his utmost skill! (Happy Life) " பிறருடைய விருப்பிற்கு அடிமையாகாதவன் பிறப்பும் கல்வியும் எவ்வளவு மதிப்பும் இன்பமும் உடையன! தன்னுடைய கண்ணியமான எண்ணமும், நேர்மையான உண்மையும், சாதுரிய நீர்மையும் அவனுக்கு இனிய துணைகளாய் இதம் புரிந் தருள் கின்றன” என்று ஹென்ரி உட்டன் (Sir Henry Wotton) என்னும் மேல் நாட்டுப் பேராசிரியர் இங்ஙனம் கூறியுள்ளார். ஏவல் வாழ்வை எந் நாடும் கேவலமாக எண்ணியுள்ளமையால் அதன் இழிவும் துயரும் எளிது தெளிவாம். அயலைச் சார்ந்து இயல் திரியாமல் ஆன வரையும் சுயநிலையில் அமர்ந்து மானம் மரியாதைகளைப் பேணி ஞானமுடன் வாழ்க. 50

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/1&oldid=1325385" இலிருந்து மீள்விக்கப்பட்டது