பக்கம்:தரும தீபிகை 2.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. நீ ர் ைம. 499 ஒருங்குருள உடல் பதைப்ப உறுங்குன்று ஏற்றி உருட்டுகினும் உயிர்கடுங்க உள்ளம் ஏங்க இருங்கழுவில் ஏற்றுகினும் அன்றி இன்னும் என்செயினும் போதாதே எங்தாய்! எங்தாய்! (2) (அருட்பா) எப்பொழுதும் தெய்வ சிக்கனே யுடையாய் உள்ளமும் உயிரும் உருகி யாண்டும் பாவசாயிருந்தும் இராமலிங்கர் இவ் வாறு மறுகி யிருக்கிருர். இக்க மறுக்கத்தாலேயே அ வ து உண்மையான உருக்கத்தை நாம் உணர்த்து கொள்கின்ருேம். சித்த சுத்தி வாய்ந்த பரி சுத்த ஆத்துமாக்கள் பா மாத் அதுவைப் பலவகையாகக் கருதிப் போற்றி மருவி மகிழ்கின்றன. சித்தம் உருகி வருகை என்றது. பத்தியின் பான்மை கெரிய வந்தது. பக்கியும் அருளும் கேரே முத்தி கிலையில் உய்த்தருளுத லால் இவை உத்தம சீர்மைகளாய் ஒளி சிறந்துள்ளன. இவ் விழுமிய பண்புகளை மேவி எழுமையும் இன்பு.ணுக. 327. வான மழையென்ன வையமெலாம் உய்யவே ஞானர்ே நல்கி நலம்புரிந்து-போன பெரியார் இயல்பெலாம் பேணி உணரின் உரிய அருளாய் உறும். (எ) இ-ள் உலகிற்கு வான மழை போல் உயிர்களுக்கு ஞான மழை பொழிந்து கலங்கள் பல புரிந்து மறைந்து போயுள்ள பெரியார் களுடைய குணகணங்களே உணர்த்து வரின் உயர்ந்த கருணை பெருகி வரும் என்றவாறு. இது, ர்ேமையாளரை கினேக என்கின்றது. உயர்த்தவர், பெரியவர் என உலகம் சிலரை வியந்து பாராட் டுவது எல்லாம் அவருடைய இனிய இயல்புகளாலும் கனிவான செயல்களினலுமே விளைந்து வங்கிருக்கின்றன. அவ் விளைவுக்கு மூல வித்து அருளே. அருள் உள்ள மாகிய ஊற்றிலிருந்து சான் ஆதாவான ஆனந்த வெள்ளம் பெருகி எழுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/108&oldid=1325087" இலிருந்து மீள்விக்கப்பட்டது