பக்கம்:தரும தீபிகை 2.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

500 த ரும தீ பி. கை. மனிதன் பெரிய உபகாளியாய் மருவிய பொழுது எவரும் அவனை உவந்து துதிக்கின்ருர், யாண்டும் விழைந்து போற்றுகின் ருர். அவன் புதியஒரு புனித ஒளியாய்ப்பொலித்து திகழ்கின்ருன். நன்மை செய்வது தெய்வத் தன்மை ஆதலால் வண்மை யாளனைத் தெய்வமாக எண்ணி வையம் வாழ்த்தி வருகின்றது. அவனது ர்ேத்தியை ஆர்வத்தோடு புலவர்கள் புனேக்து பாடு கின்றனர். சீரும் பேரும் பாரில் பாவி மிளிர்கின்றன. "பாரி பாரி என்றுபல ஏத்தி ஒருவற் புகழ்வர் செங்காப் புலவர் பாரி ஒருவனும் அல்லன் மாரியும் உண்டுஈண்டு உலகுபுரப் பதுவே. (புறம், 107) பாரி என்னும் பேருடைய வள்ளலைக் குறித்துக் கபிலர் இவ் வாறு பாடியிருக்கிருர். மழை எவ்வாறு உலகம் செழிக்க உதவி புரிந்து வருகிறதோ அவ்வாறே பாரியும் கைம்மாறு கருதாமல் கருணையுடன் உதவி செய்து வருகிருன் என்பதை இங்ானம் அதி விநயமாக விளக்கி யிருக்கிருர். மாரி = மழை, மேகம். பாரியும் மாரியும் இவ்வுலகிற்கு உயிாாதாாமாயுள்ளனர் என உள்ளம் உருகிப் போற்றி யிருத்தலால் அவ் வள்ளலின் உபகாா கிலைமையையும் உயர் கலைமையையும் உணர்த்து கொளகின்ருேம். இனிய ாேய்ை உபகரிப்பவன் அரிய சீருடையய்ைப் பெரு மகிமை அடைகின்ருன். கானம் தவம் ஞானம் என்னும் இவை ஆன்ம ஆகியங்களாய் மேன்மை புரிந்து வருகின்றன. ஞான நீர் நல்கி நலம் புரிந்து போன பெரியார். என்றது. புத்தர் முதலிய உத்தம சீலர்களை. அவர் இயல்பு எல்லாம் அருளாய் உறும் என்றது செயல் கிலைகளை கினைத்து. எவ்வுயிர்க்கும் இாங்கி இகம் புரிக்கருளுவதே இந்த அரிய மனிதப் பிறவியின் பெரிய பயன் என அவர் போதித்துப் போ யிருக்கின்ருர். உயிர்க்கு உய்தியான உறுதிகலங்களைத் தம் செயல் உரைகளால் உணர்த்தியிருத்தலால் மேலான ஞான வள்ளல் என ஞாலம் அவாைப் போற்றி வருகிறது. "மாண்பொடு தோன்றி மயக்கம் களைந்து பிறர்க்கு அறம் அருளும் பெரியோன்." (மணிமேகலை)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/109&oldid=1325088" இலிருந்து மீள்விக்கப்பட்டது