பக்கம்:தரும தீபிகை 2.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

510 த ரும தி பி ைக. உயர்வும் சுகமுமே சேய வேண்டும் என்று யாண்டும் மூண்டு கிற் பவன். இத்தகைய கிலையில் உள்ள அவன் கிலையான செவ்விய நெறியில் எவ்வழியும் விலகாமல் ஒழுகக்கடமைப் பட்டிருக்கிருன். நெறியுடையான் என்பான் நெறிகடந்து செல்லா அறிவுடையான் என்றது அறிவின் தலைமையும் நெறியின் கிலைமையும் அ றி'ய வந்தது. நெறி முறை ஒழுகும் அளவே அறிவு ஒளி பெறுகின்றது. மிருகங்களினும் மனிதன் பெரியவன் என்பது அறிவுடை மையினலேயாம. அங்க அறிவுக்குப் பயன் செறி கடவாது ஒழுகு தலே. நெறி வழுவின் அவன் அறிவிலியாய் இழிந்து படுகின்ருன். அறிவினல் பெரியவன் என்பது எல்லாம் நெறி வழுவாமல் ஒழுகி கிற்கும் கிலையையே பொறுத்துள்ளது. 'அறிவினுல் பெரிய ரோர் அருவினே கழிய கின்ற நெறியினைக் குறுகி இன்ப கிறைகடல் அகத்து கின்ருர், பொறி எனும பெயர ஐவாய்ப் பொங்கமுல அரவின் கண்ணே வெறி புலம் கன்றி கிண்ருர் வேதனேக் கடலுள் கின்ருர். (சிந்தாமணி, 375) நெறியுடையார் இன்ப கிறைகடல் அடைக்கார்; அதில் வழு வினர் துன்பக் கடலில் விழுந்தார் என்னும் இதனை விழியூன்றி உணர்க. ஐவாய் அசவு என்ற து ஐம்புலன்களையுடைய உடலை, விடயங்களில் வெறிமண்டி நெறி கடந்து பொறிவழி இடி உழல்பவர் இறுதியில் அடையும் இடர் கிலையை உணர்ந்து உறுதி தெளிந்து உய்ய வேண்டும். அரிய அறிவு படைத்த பயன், உரிய நெறி ஒழுகி உய்கி பெறுதலே ஆதலால் மனிதனுக்கு அது இனிய கடமை ஆயது. வாழ்த்துமின் தில்லை; கினேமின் மணி மன்றம்: தாழ்த்துமின் சென்னி தலைவற்கு:-வீழ்த்த புறநெறி ஆற்ருது அறநெறி போற்றி நெறி நின்று ஒழுகுதிர் மன்ற துறையறி மாங்தர்க்குச் சூழ்கடன் இதுவே. (சிதம்பாச் செய்யுட் கோவை 84) னெறி வழுவாது ஒழுகுவோனே மனிதன்; அவனுக்குத் தெய்வப் பேறு தனி உரிமையாம்; உய்தியும் இன்பமும் ஒருங்கே உளவாம் என இன்னவாறு நூல்கள் பல குறித்துள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/119&oldid=1325098" இலிருந்து மீள்விக்கப்பட்டது