பக்கம்:தரும தீபிகை 2.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபத்தொன்பதாம் அதிகாரம். ஆண்மை. அஃதாவது ஆண்மகனது தகைமை, உறுதி, ஊக்கம், அறி வாற்றல் அஞ்சாமை முதலிய இயல்புகளில் சிறந்து செயல் புரிந்து வருவதே உயரிய ஆண்மையாம். கன் எண்ணங்களின் அளவே மனிதன் உயர்கின்ருன் என்னும் உண்மையை உணர்த்து ன்ெறமையால் தன்னம்பிக்கையின் பின் இது வைக்கப்பட்டது. 281 ஆளும் தகைமை அமைந்து வங்தமையால் ஆளெனும் பேரை அடைந்துள்ளாய்-ஆள்எனவே போந்த நேர்ந்த புயவலியைப் பேணியிசை எங்தி ஒழுகல் இனிது. (க) எல்லாவற்றையும் அடக்கியாளும் க ன் ைம ய ர ல் ஆள் என்னும் பேரை அடைந்து வந்துள்ள நீ உன் தோள்வலியை உயர்த்தி நீள் இசையை வளர்த்து கிலத்து வாழ வேண்டும் எனறவாறு. இது, ஆண்மையின் அமைதி கூறுகின்றது. உலகில் காணப் படுகின்ற மிருகம் பறவை முதலிய பிராணி கள் எவற்றையும் அடக்கி ஆளும் சலேமை மனிதனிடம் மருவி யுள்ளமையால் ஆள் என நேர்ந்தான். இதல்ை அவனது பான் மையையும் மேன்மையையும் கூர்மையாக ஒர்த்து நீர்மையைத் தேர்ந்து கொள்க. முயற்சிக்கு ஆள்வினை என்று பெயர். மனிதன் கருதிச் செய்வது என்னும் காாணத்தான் அப்பேர் வந்தது. ஊழ்வினையாளய்ை வந்துள்ள மானிடன் சூழ்வினையுடன் செய்ய வுரியது என்றமையால் ஆள்வினையின் கேளும் கிழமையும் அறியலாகும். காளும் அது நன்கு ஆற்ற அமைக்கது. பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி. (குறள், 618)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/14&oldid=1324990" இலிருந்து மீள்விக்கப்பட்டது