பக்கம்:தரும தீபிகை 2.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முப்பத்தைந்தாம் அதிகாரம். நேர்மை. அஃதாவது மனச் செம்மை வஞ்சம் கபடு காவுகள் புகாமல் நெஞ்சைச் செவ்வையாகப் பாதுகாத்து வைத்திருக்கும் சிர்மை நேர்மை என வந்தது. யாண்டும் எவ் வழியும் யாதும் கோடாமல் திே முறைமையில் கிலைத் திருக்கும் கிலைமையை உரிமையாக உணர்த்துகின்றமையால் நெறியின் பின் இது வைக்கப் பட்டது. 841. செம்மை யுடைய திருவுடையார் தேசுடனே எம்மை நலனும் இனிதெய்தி-இம்மை மறுமை எனுமிரண்டின் மாண்பும் ஒருங்கே பெறுவர் பெருமை பெரிது. (க) இ-ள் மனச் செம்மையாகிய கிருவினையுடையவர் அரிய புகழுடன் இனிய கலங்கள் பலவும் அடைக் து இருமையினும் பெருமை மிகப் பெறுவர் என்பதாம். இது, நேர்மையால் விளையும் சீர்மைகளை விளக்குகின்றது. மனிதன் மனத்தால் விளங்குகின்ருன். கல்லவன் தீயவன் மேலோன் ேேழான் என்பன எல்லாம் மனப் பண்பின் உயர்வு தா ழ்வுகளிலிருந்து கிளைத்து விளைந்திருக்கின்றன. விளைவுக்கு வித்து மூல காரணம் ஆகல்போல் ஒருவனுடைய கிலேமைகளுக்கு அவன் மனம் மூல முதலாயுள்ளது. இத்தகைய மனத்தை ஒருவன் பண்படுத்திவரின் அவன் எல்லா இன்ப கலங்களையும் எளிதே அடைந்து கொள்கின்ருன். மனிதன் பெறத்தக்க பேறுகள் எவற்றிற்கும் மனமே இனிய துணையாய் உரிமையுடன் அமைந்திருக்கலின் அதனே எவ்வழியும் செவ்வையாக அவன் பேணி வர வேண்டுவது காணியாயதி. ஊனுடம்பு எடுத்திவ் வுலகிடை உதித்த மானுடம் எல்லாம் மனநிலை அளவே வானிடை ஏகலும் வையகம் வாழ்தலும் தாமுடையனவாய்த் தழைத்தமர்க் துள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/150&oldid=1325130" இலிருந்து மீள்விக்கப்பட்டது