பக்கம்:தரும தீபிகை 2.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

542 த ரும தி பி ைக. ஆன்ம ஊதியங்கள் யாவும் மனத்தின் தகுதி அளவே மருவி வருகின்றன என இஃது உணர்த்தியுள்ளமை காண்க. கருதிய உறுதி கலங்கள் கைவர வேண்டின் மனத்தைச் செம்மையாக மனிதன் செய்து கொள்ள வேண்டும். நேர்மை ஒர் அங்குலம் விலகின் சீர்மை உன்னே விட்டு ஒரு காகம் ஒதுங்கிப் போய் விடும்; அங்கனம் சீரழிந்து போகாமல் செம்மை நலம் பேணி நன்மை பெறுக. செம்மை=செவ்விய தன்மை. அஃதாவது கோட்டமின்றி யாண்டும் நேர்மையாய் கிற்கும் ர்ேமை. சிறந்த பெருந்தகை யாளாது உயர்ந்த பண்பாய் ஒளி மிகுந்துள்ளமையால் இத் தன் மையை உலகம் உவத்து கொண்டாடுகின்றது. செம்மையின் ஆணி எனப் பாதனைக் குறித்து இராமன் வியந்து கூறியிருக்கலால் இக் குண நீர்மையின் மேன்மையை அவ் வீரக் குரிசில் விழைந்து பேணியுள்ளமை விளங்கி கின்றது. 'அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கிச் செற்றமும் உவகையும் செய்யாது காத்து ளுெமன்கோல் அன்ன செம்மைத் தாகி" (மதுாைக்காஞ்சி) 'அகம்புரி செம்மை அன்பிற்காட்டி’ (பெருங்கதை) 'செம்மை மாதவர் செய்தவப் பள்ளியே. (சிந்தாமணி) செம்மையின் இயல்பும், அதனை யுடையவாது உயர்வும், தகவும் இவ் வுரைகளால் உணர்ந்து கொள்ளலாம். எல்லா கன்மைகளையும் இனிய செல்வங்களையும் தனியே எல்2 அருளுதலால் செம்மை திருவுடைமை என வக்கது. மனிதனது மாண்பு மனத்தில் உள்ளது; அம் மனத்தின் மேன்மை செம்மையில் கிலேத்து கிற்கின்றது. நேர்மை குன்றிய பொழுது மனம் சீர்மை இன்றி கிலே தளர்ந்து படும். படவே மனிதன் சீர்மையிலனுய்ச் சிறுமை அடைய கேர்கின்ருன். உயர்ந்த சீலக்கின் உயிர் கிலேயமாய்ச் செம்மை சிறக்கிருத் தலால் அரிய பல கலங்களை எளிதில் அது பயன்தருளுகின்றது. “Integrity in word and deed is the backbone of character. " (Smiles)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/151&oldid=1325131" இலிருந்து மீள்விக்கப்பட்டது