பக்கம்:தரும தீபிகை 2.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. நேர்மை. 543 சொல்லிலும் செயலிலும் நேர்மையாய் கிற்பது ஒழுக்கக் தின் முதுகெலும்பாயுள்ளது” என்னும் இது ஈண்டு உனாத் தக்கது. நேர்மை சிலத்தின் உயிர் கிலை என்ற கல்ை அதன் நீர்மை நிலை தெரியலாம். கள்ளம் காவு கபடுகள் நேர்மைக்கு கேர் விசோதிகள். அவை உயிாைப் பழுது படுத்தி விடும். அங்க இழிவுகள் உள்ளத்தைப் பற்ருமல் பாதுகாத்து இக்க விழுமிய தகைமையை யாண்டும் மேவி ஒழுகின் மேன்மைகள் யாவும் விாைத்து பெருகி வியன் பயன் கரும். மெய்ம்மையாம் உழவைச் செய்து, விருப்பெனும் வித்தை வித்திப், பொய்ம்மையாம் களேயை வாங்கிப். பொறைஎனும் நீரைப் பாய்ச்சித் தம்மையும் நோக்கிக் கண்டு தகவு எனும் வேலி இட்டுச் செம்மையுள் கிற்பர் ஆகில் சிவகதி விளே யும் அன்றே. (தேவாாம்) பேரின்ப விளைவுகளுக்கு உரிய சாதனங்களை இது குறிக் தள்ளது. செம்மையுள் கின்ருல் சிவ கதி விளையும் என்றது. இம் மையும் மறுமையும் அது ஈக்கருளும் என்பது ஒர்க் து கொள்ள வந்தது. கேசு=ர்ேக்கி. புகழ் பொருள் புண்ணியம் முதலிய எல்லா இன்ப கலங் களுக்கும் மன நலமே காரணமாயுள்ளது; அதனைப் புனிகமாக இனிது பேணுகின்றவன் மனிதருள் தெய்வமாய் மருவி மிளிர் கின்ருன். காவு முதலிய ஈனங்களால் பழுது படாமல் உள்ள நெஞ்சு விழுமிய கிலையை அடைகின்றது. அடையவே அது கடவுள் கிலை யமாய்ச் சிறந்து அளவிடலரிய மகிமைகளைப் பெறுகின்றது. “O spirit ! that dost prefer before all temples the upright heart and pure.” (Paradise Lost) நேர்மையான தாய உள்ளக்கையே எல்லாக் கோயில்களி லும் இனியதாக உவத்து குடி கொண்டுள்ள ஒ கடவுளே' என ஆங்கில மகா கவியாகிய மில்ட்டன் கூறியுள்ளது ஈண்டு அறிய உரியது. செவ்விய இதயம் கிவ்விய தெய்வ ஆலயமாயது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/152&oldid=1325132" இலிருந்து மீள்விக்கப்பட்டது