பக்கம்:தரும தீபிகை 2.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. நேர்மை. 545 பிறரை வஞ்சிக்க நேர்ந்தவன் நேர்மையான தன் நெஞ்சக் கைப் பாழ் படுத்தித் தனது இனிய உயிரைக் கெடுத்தவன் ஆகின்ருன். அக் க்ேடு கோாமல் பீடு பெறுகின்றவனே உண்மை யான ஆடவன்; அவனே உயர்ந்த பிறவிப் பேற்றை அடைக்க மகிழ்கின்ருன். மனம் செம்மையுறின் தன்மைகள் வருகின்றன. எற்றமான ஆற்றல்கள் எல்லாம் மனிதனது உள்ளத்தையே ஊற்றமாய்க் கொண்டு ஊன்றி கிற்கின்றன; நெஞ்சம் கிலை குலையின் யாவும் புலையாய் இளிவடைகின்றன. தஞ்சமும் தருமமும் தகவு மேயவர் கெஞ்சமும் கருமமும் உரையு மேகெடு வஞ்சமும் பாவமும் பொய்யும் வல்லகாம் உஞ்சுமோ? அதற்கு ஒரு குறை உண்டாகுமோ? (கும்பசருணன் வதைப்படலம், 85) இது இராவணனே நோக்கிக் கும்பகருணன் உாைத்தது. இாாமனது தன்மைகளையும், கம் மாயின் புன்மைகளையும் சுட்டிக் காட்டி அப் போர் வீசன் கூறியிருக்கும் இவ் வார்த்தைகளே காம் ஊன்றி நோக்கி ஒர்ந்து சிக்கிக்க வேண்டும். கம் எதிரி கரும குண சிலன்; நேர்மையாளன். சாமோ, நெஞ்சில் வஞ்சம்; உாையில் பொய்; செயலில் பாவங்களையுடை யோம்; நமக்கு இனி உய்தி உண்டோ? நாம் இனி விளங்க மாட் டோம்; அடியோடு அழிக்கே தொலைவோம்’ என மனம் உடைந்து வயிறு எரிந்து இவ்வாறு அவன் பேசியிருக்கிருன். இப் பேச்சில் அவனுடைய உள்ளத்தையும் உணர்ச்சியையும் உறுதியான உண்மை கிலையையும் ஒருங்கே காண்கின்ருேம். எவ்வளவு வல்லமைகளையும், எ க் துணைச் செல்வங்களையும் புறத்தே ஒருவன் எய்தி யிருக்காலும் அகக்கே கல்ல தன்மை இல்லை ஆயின் அத்தனையும் பாழாய் இழந்து அவன் அழிக்கே போவான் என்பதை இவ் வுரையால் உணர்ந்து கொள்ன்ெருேம். நெஞ்சம் பாழ்படின் மனிதன் சுகமாய் வாழ முடியாது; தாழ்வடைந்து களர்ந்து விழ் நிலையணுய் விளிங்தே தொலைவான் என்பது தெளிந்தோர் மொழிகளில் விளங்கி கிற்ன்ெறது. 69

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/154&oldid=1325134" இலிருந்து மீள்விக்கப்பட்டது