பக்கம்:தரும தீபிகை 2.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

550 த ரும தீ பி ைக. மனம் வழுவுமின் மனிதன் இழிவும் துயரும் மருவி அழி வுறுகின்ருன்.உள்ளக்கேடு வெள்ளக்கேடாய் விரிந்து எழுகின்றது. உடம்புக்குக் கண்கள்போல் உயிர்க்கு உள்ளம் கண். இந்த அருமை விழி பழுதுபடின் ஆன்ம வாழ்வு இருள் அடர்ந்து மருள் படர்த்து அழி துயாங்கள் அடைகின்றன. சூரியன் ஒளி எங்கும் பிரகாசமாய் இருந்தாலும் ஒளி இழக்க விழிக்கு யாதும் பயன் படாது. பாஞ் சோதியாகிய இறைவன் அருள் யாண்டும் கிறைத்திருந்தாலும் பழுது பட்ட உளத்துக்கு ஒர் உதவியும் பயவாது. கடவுள் காத்தாலும் இழிந்து அழிவாய். என்றது உள்ளம் கெடின் உளவாகும் இழிவையும் அழிவை யும் தெளிவாக வலியுறுத்த வந்தது. உறுதியைக் கருதி உணருக. மனம் இருந்தபடி குரு இருந்தருளும் என்பது பழமொழி. மனத்தின் புனித நிலைக்குத் தக்கபடியே தெய்வங்கள் சகாயம் செய்கின்றன. அது கெடின் யாவும் கைவிட்டு விடுகின்றன. குருட்டுக் கண்ணுக்குக் கதிரவனும் உதவி செய்ய முடியாது; திய கெஞ்சுக்குக் கடவுளும் கைதா இசையாது. கன் கெஞ்சம் புனிதமாக அமையின் அம் மனிதன் அதிசய ஆற்றலுடையய்ைத் கனி மகிமை அடைகின்ருன். பள்ளத்தில் வெள்ளம் வந்து பெருகுதல் போல் கல்ல உள் ளத்தில் எல்லா கலங்களும் இனிது கிறைன்ெறன. உலகம் எலாம் கேடு செய்தாலும் உன் எதிரே பயம்படாது. என்றது. செவ்விய கல்ல உள்ளத்தின் திவ்விய கிலைமை தெரிய வந்தது. மனம் திேயும் நேர்மையும் தோய்த்திருப்பின், அது ஆகி பகவனது கிலேயம் ஆகின்றது; ஆகவே யாதொரு தீதும் அதனே அனுகாமல் ஒழிகின்றது. தன் நெஞ்சம் கல்லதாயின் அம் மனிதன் யாண்டும் அஞ்ச வேண்டியதில்லை. உலகம் எல்லாம் ஒருங்கு திாண்டு இடர் செய்ய சேர்க்காலும் அவனுக்கு யாதொரு துயரும் கோது. கயமுடைய கெஞ்சம் பயம் அடையாது. எங்கும் அஞ்சாமல் கின். அருங் கிமல் புரிந்து பெருத்தகைமை காணும். இக் காட்சி யைக்கண்டு மனிதன் மாட்சி அடைய வேண்டும். பயம்=அச்சம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/159&oldid=1325139" இலிருந்து மீள்விக்கப்பட்டது