பக்கம்:தரும தீபிகை 2.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. ஆ ண் மை. 407 8ே8, பெற்றவர்கள் உற்றவர்கள் பேணி அடைந்தவர்கள் மற்றவர்கள் யாவருக்கும் மாண்பருளி-வெற்றி கிலேயில் நிலைத்து நெறிபுரிந்து வாழ்வோன் தல்ைமகனே யாவன் தனி. (e–) இ-ள் பெற்றவர் உற்றவர் மற்றவர் எவரையும் மாண்புறுத்தி வினயாண்மைகளில் வெற்றி மிகப் புரிந்து கொற்றமுடன் வாழ் வோனே குலமகன் ஆவான் என்றவாறு. பலரும் மேன்மை யு லும்படி பண்பாற்றி வருதலே தலைமை யான ஆண்கடன் என இது அவனது கிலைமையை உணர்த்து ன்ெறது. செறி=திே முறை. பெற்றவர் என்றது தாய் கங்கையாை. உற்றவர்=உறவாய் அமைந்த சுற்றத்தார். அடைந்தவர் = ஆகாவை நாடி வந்து அடுத்தவர். மற்றவர்கள் என்றது பொதுமக்களை. ஆண்மகனுய்ப் பிறந்த ஒருவன் தன் பிறப்பினைச் சிறப்புறச் செய்ய வேண்டிய வகைகளை வகுத்துக் கூறிய வாமிது. மாண்பு அருளி என்றது தன்னச் சேர்ந்தவர்கள் யாவரும் பெருமையுதும்படி உரிமை செய்தலை. பெற்றவர்களை முதலில் குறித்தது தன்னை ஈன்றவர்கள் உள்ளம் இன்புறச் செய்வதே பிள்ளையாய்த் தோன்றிய தோன்ற லின் ஆன்றகடமை ஆதலால் அங்கிலைமையும் தலைமையும் கினைந்து. சிறந்த ஆண்மையும் சீர்மையும் நீர்மையும் கிறைக்க ஒருவனேக் கண்டபொழுது அவன்பிறக்க குடியை உலகம் உவந்து போற்றும். :இங்த உத்தமனேப் பத்து மாதம் தன் வயிற்றில் வைத் திருத்தற்கு அக் காய் எத்தகைய தவம் செய்தாளோ? ' என இாாமனைக் கண்டபோது கண்டக வன வாசிகள் கொண்டாடினர். "தாய்புரி கோன்போ? தங்தைசெய் தவமோ? தேசமும் மக்களும் செய்தால் வினேயோ? இந்த அண்ணலே இங்ாவனம் கண்டது! : என உதயணனப் பார்த்தவர் கூறியது போன்ற வார்த்தை களே உள வாக்குவோரே உத்தம புத்திார் ஆகின்ருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/16&oldid=1324992" இலிருந்து மீள்விக்கப்பட்டது