பக்கம்:தரும தீபிகை 2.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. ஆண் மை. 409 உபகரித்தற்கு உரியபொருள் முயற்சியால் உண்டாகின்றது. _ம் முயற்சி ஆண்மையால் அமைகின்றது. ஆகவே ஆளாண்மை தாளாண்மை வேளாண்மை என இம் மூன்றிற்கும் உள்ள _மவுரிமைகளை உனாலாகும். தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக் கெடும். (குறள், 614) இதில் வந்துள்ள ஆண்மை வகைகளே ஆய்ந்து உணர்க. தாளாண்மை=முயற்சி. வேளாண்மை=உபகாரம். உபகாரியே உயர்ந்த ஆண்மையாளன்; அஃது இல்லாதவன் இழிக்க பேடியே. வேளாண்மையாளன் வாளாண்மையாளனிலும் முதன்மை யானவன் என்பதை இதன் கண்ணும் உணர்ந்து கொள்கின்முேம். எளியரிடம் இவ்வாறு இதமுடையகுயினும் பகைவர்க்கு அச்சத்தைவிளேத்து உச்சநிலையில் உறுதிகொண்டு கிற்கவேண்டும். அடுத்தவரை ஆதரி, கடுத்தவாைக் களேங்து எறி. "கட்டவர் குடி உயர்க்குவை; செற்றவர் அரசு பெயர்க்குவை. : (மதுரைக்காஞ்சி) என நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னனே மாங் குடி மருதனர் இங்கனம் பாராட்டியிருக்கிரு.ர். "மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ்பட நயந்தோர் தேஎம் கன்பொன் பூப்ப. ' (பெரும்பாண்) இளந்திரையன் இருந்துள்ளதும் ஈண்டு உளம் கொள்ள அரியது. "ஞாயிற் றன்ன வெந்திறல் ஆண்மையும் திங்கள் அன்ன தண்பெருஞ் சாயலும் வானத் தன்ன வண்மையும் மூன்றும் உடையை ஆகி இல்லோர் கையற நீ டுே வாழிய நெடுங்தகை' (புறம், 55) பகைவரைக் காய்தலில் குரிய ன், பரிந்து அருளுதலில் சக்திான், இாங்கி ஈதலில் கார்மேகம் என கன்மாறன் பேரிசை பெற்றிருக்கின்றன். நம் முன்னேருடைய ஆண்மைத் திறங்களை எண்ணுந்தோறும் உணர்ச்சியும் மகிழ்ச்சியும் நமக்கு உளவாகின் றன. போரில் நேர்மையாகப் பொருது வெற்றி பெறுதல் பெரிய ர்ேத்தியாம். ஒருவனே விான் எனின் அவன் உள்ளம் பூரிக்கின்ருன். 52

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/18&oldid=1324994" இலிருந்து மீள்விக்கப்பட்டது