பக்கம்:தரும தீபிகை 2.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86. தாய்மை. 583 அசுத்தன் என்பது வாழ்வின் இளிவையும் தாழ்வையும் உணர்த்தி அவனே ஒரு ஈன கிலையினனுக் காணச் செய்கின்றது; அதனை மான மனிதன் மருவலாகாது. உள் மாசு ங்ேகி உயர்க. என்றது வெளி மாசுகள் மட்டும் நீங்கினல் போதாது; மனம் மாசு ங்ே.ெ மைெமயுற வேண்டும் என்றவாறு. உடலை ஒம்புதல், குடி வாழ்க்கை புரிதல், தொழில் முறை நடத்தல் முதலிய நிலைகளில் மாத்திாம் பவித்திரமாய் இருக்காலும் உள்ளத் தாய்மை இல்லையாயின் அவை செவ்வையாய்ச் சிறந்து கில்லா ஆதலால் சிக்க சுத்தியை எத் திறத்தும் நன்கு பேணி வருதல் என்றும் லைமாம். சத்தியம் தயை நேர்மை பொறுமை கிராசை அடக்கம் முதலிய குண நலங்களால் மனம் புனிதம் அடையும் ஆதலால் மானச தீர்த்தங்கள் என இவை மதிக்கப் பட்டுள்ளன. இந்த உத்தம இயல்புகளையுடையவன் சிக்க சுக்கியாளய்ைச் சிறந்து விளங்குன்ெமுன். அகத்தே நல்ல ர்ேமைகள் இல்லை ஆயின் புறத்தே எவ்வளவு தீர்த்தங்களில் போய் மூழ்கிக் குளித்தாலும் மனிதன் புனிதனுக முடியாது. அறத்துறை பயிலும் மாணத தீர்த்தம் ஆடலராகி நீர் ஆடில் புறத்தழுக்கு ஒழிவது அல்லது புனிதர் ஆகிலர்: பூந்திரை சுருட்டும் சிறைப்புன லகனில் முழையுறம் பகுவாய்த் தீவிழிக் கூர்எயிற்றிடங்கர் சுறககுல முதல அளப்பருங் காலம் தோய்ந்ததால் துறக்கம் உற்றனவோ? (காசி காண்டம்) உள்ளே நல்ல குணங்கள் இல்லாமல் வெளியே குளித்து முழுகி மேனி மினுக்குகலால் மாக்கிாம ஒருவன் சுக் கன்ஆகான்; அப்படி ஆளுல் எப்பொழுதும் நீரிலேயே கிடக்கின்ற மீன் தவளை முதலைகள் யாவும் பரிசுத்த சீவன்களாய் முக்தி அடைக்கிருக் குமே! என யுத்தியோடு இது வாகிக்கிருக்கிறது. அகம் தாய்மை இல்வழி வெறும் வெளி ஆசாரங்களால் வியன் பயன் விளையாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/192&oldid=1325172" இலிருந்து மீள்விக்கப்பட்டது