பக்கம்:தரும தீபிகை 2.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. ஆண் ைம. 4.1.1 வதன. உறுபொருள் ஈட்டல், வரு பிழை ஒட்டல் முதலிய முயற்சித் துன்பங்களை யெல்லாம் தான் ஏற்றுக் கொண்டு தன் குடும்பத்தார் எவ்வழியும் இன்பம் உறும்படி பாதுகாத்து வரு ன்ெற அன்பும் ஆண்மையும் குடித் தலைவனுக்குப் பண்புகளாய் அமைந்துள்ளன. 'இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு. " (குறள், 1029) குடும்பம் தாங்கும் ஆண்மையாளன் இடுப்பைக்கே இடமா யுள்ளானே! என்று தேவர் இதில் இாங்கியுள்ளமையான் அவனது நிலைமை புலனும். குடும்ப பாரம் என வழங்கும் தொடர்மொழி பாலும் அதனைச் சுமந்து கிம்பவனது அமைதி தெளிவாம். நெடும்பல் மால்வரை துார்த்து நெருக்கவும் துடும்பல் வேலே துளங்கியது இல்லையால் இடும்பை எத்தனேயும் படுத்து எய்தினும் குடும்பம் தாங்கும் குடிப்பிறங் தாரினே. (இராமாயணம், சேதுபங்தனம் 53) அணைகட்டுவதற்காக நெடிய பல மலைகளைக் கொண்டு வந்து வானாங்கள் தொடர்ந்து வீசியும் கடல் பாதும் கலங்காமல் குடும்பம் தாங்கும் குடிப் பிறந்தாரைப் போல் இருந்தது எனக் குறித்திருக்கும் இதன் அழகைக் கூர்ந்து பார்க்க. வள்ளுவர் வாய்மொழியைக் கம்பர் அள்ளிஎடுத்துக் கலையுலகை அலங்கரித்து வரும் காட்சி கழிபேருவகையாயுள்ளது. பழுமரம் பறிக்கப் பறவைக் குலம் தழுவி கின்று ஒருவன் தனி தாங்குவான் விழுதலும் புகல் வேறிடம் இன்மையால் அழுதரற்றும் கிளேளன ஆனவால். (இராமா சேது, 55) ஆலமரத்தை இழந்த பறவைகள் குடித் தலைவனே இழக்க ைெளகள்போல் அழுது.அாற்றின என்னும்இதுவும் ஈண்டுஎண்ணத் தக்கது. குடும்பத்தை ஆதரித்து வருவது எத்துனே ஆண்மை என்பதை இவற்ருல் உய்த்துணர்த்து கொள்ளலாம். உறுதியாளய்ை உதவி புரிக என்பது கருத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/20&oldid=1324996" இலிருந்து மீள்விக்கப்பட்டது