பக்கம்:தரும தீபிகை 2.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. நே யம். 593 இங்ஙனம் உயர்த்தபிறப்பை அடைந்து கிற்கின்ற உயிர் சகுக்க அன்பைச் செய்து கொள்ளின் பின்பு வேறே பிறந்துபடாமல் .ே பேரின்ப கிலேயை விரைந்து பெற்றக் கொள்ளுகின்றது. அன்பு யாண்டும் பிறர்க்கு இதமாய் மீண்டு விரிகின்றது அதன் ஒவ்வோர் அணுவும் இன்பத் துணிகளாய்ப் பசவி வருத லால் அது எங்கும் புண்ணியக்கடலாய்ப் பொங்கி மிளிர்ன்ெறது; ஆகவே பேரின்பச் சுவையை ஆன்மா தகர்த்து மகிழ்கின்றது. இவ்வாறு சிறக்ச ஊதியமாய் அன்பு அமைக்கிருத்தலால் அதனை விழைந்து புரிவது ஆருயிர்க்கு அமைக்க உரிமை ஆயது. தானமும் தருமமும் சவமும் ஞானமும் உயிர்க்கு உறுதி பாய் உய்தி புரிவன ஆயினும் அன்பைப் போல் அவை எளிதில் இன்ப கலனை சக்தருளா. பொருளைச் செலவழித்துப் புலன்கண் அடக்கிப் பட்டினி கிடந்து உடம்பை வாட்டிப் படா சபாடுகள் பட்டபின்பு முடிவில் சிறிது பலனக் காட்டும் அவற்றினும், யா தொரு பாடும் படாமல் கருதிய உடனேயே அரிய உறுதி ஈலங் களையும் பெரிய இன்பங்களையும் ஒருங்கே விளைத்தருளுகின்ற அன்பு எவ்வளவு அதிசயமுடையது இதயம் சிறிது கனியவே அரிய சலங்கள் யாவும் எனிதே உதயம் ஆகின்றன. தெய்வ விருபையும் கைவந்து சேர்கின்றது. 'அன்பினுக்கு எளிவந்த அமுதே' என இறைவனைத் துதித் திருக்கலால் அன்பின் அற்புத கிலேமையை அறியலாகும். என்பு தோல் உடை யார்க்கும் இலார்க்கும் தம் வன்பகைப்புலன் மாசற மாய்ப்பது என்? முன்பு பின்பின்றி மூவுல கத் தினும் அன்பின் அல்லதுஓர் ஆக்கம் உண்டாகுமோ? (இராமாயணம்) வசிட்ட முனிவர் இராமபிரானுக்கு உாைத்த படியிது. தம் புலன்களை அடக்கிக் கடவுளரை நோக்கிக் கடுக்கவங்கள் புரிவதினும் எவ் வுயிர்க்கும் இாங்கி அன்பு செய்துவரின் அதனல் எல்லா இன்ப கலங்களும் எனிதே வந்து சேருமே என மக்க ளுக்கு இகமான ஒர் ஞான உபதேசமாய் இது இசைக்கிருக்கிறது. ஒரு அரிய தவசி வாயிலாக அன்பின் பெருமையைக் கம்பர் இங்கனம் காட்டியுள்ளார். காட்சி கருதி யுனா வுரியது. 75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/202&oldid=1325182" இலிருந்து மீள்விக்கப்பட்டது