பக்கம்:தரும தீபிகை 2.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. நேயம். 603 "கின் நிழல் அன்னேர் அல்லது இன்னேர்! சேர்வர் ஆதலின், யாஅம் இரபபவை பொருளும் பொன்னும் போகமும் அல்ல: கின்பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும ■ உருள்னர்க் கடம்பின் ஒலிதாரோயே! : (பரிபாடல். 5) கடுவன் இளவெயினனுர் என்னும் புலவர்பெருமான் முருகக் கடவுளை கோக்கி இவ்வாறு வேண்டியிருக்கிருர் பொருளும் போகமும் பிறவியை நீக்காது ஆதலால் அதனே கேகியருளுகின்ற அன்பு கிலையையே தமக்கு அருள வேண்டினர். இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டுகின்ருர் இந்வாமை வேண்டும்; மீண்டும் பிறப்பு உண்டேல், உன்னே என்றும் மறவாமை வேண்டும: ஆன்னும் வேண்டு நான் மகிழ்ங்து பாடி அறவாங் ஆடுமபோதுன் அடியின் கீழ் இருகக என்ருர், (பெரிய புராணம்) காரைக்கால் அம்மையார் இறைவனிடம் இவ்வாறு அன்பு கிலையை உரிமையுடன் முறையிட்டு வேண்டியுள்ளார். "புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன் அடி என்மனத்தே வழுவாது இருக்க வரம்தர வேண்டும." (தேவாரம்) என்பில்லாத புழுவாய்ப் பிறந்தாலும் உன்பால் அன்பிருக் தால் அது எனக்கு இன்பப் பிறவியாம் என அப்பர் இப்படி அரண் கோக்கி உருகி உாைத்திருக்கிருர். முருகன் குமரன் குகன்என்று மொழிந்து உருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய்? ப்ொரு புங்கவரும் புவியும் பரவும் குருபுங்கவ! எண்குண பஞ்சானே. (கந்தர் அதுபூதி) உள்ளம் உருகும் நிலையை உதவி யருளும்படி அருணகிரி நாதர் முருக வள்ளலை இவ் வண்ணம் பாவி உருகியிருக்கிரு.ர். "என்பெலாம் கெக்குடைய உரோமம் சிலிர்ப்ப, உடல் இளக, மனது அழலின் மெழுகாய் இடையருது உருக வருமழை போல் இரங்கியே இருவிழிகள் நீர் இறைப்ப அன்பினல் மூர்ச்சித்த அன்பருக்கு அங்ங்னே அமிர்த சஞ்சீவி போல் வங்து ஆனந்த மழைபொழிவை உள்ளன்பிலாத என யார்க்காக அடிமை கொண்டாய்சீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/212&oldid=1325195" இலிருந்து மீள்விக்கப்பட்டது