பக்கம்:தரும தீபிகை 2.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. நே ய. ம். 621 மனிதன் அன்பால் உருகி அழுத பொழுது தெய்வம் கருனைத் தாய்ாய்க் கனிந்து வந்து அவனே உவத்து அணேத்து எடுத்துக் கொள்ளுகின்றது. கொள்ளவே துன்பங்கள் யாவும் தொலைந்து போகின்றன; இன்ப கலங்கள் பெருகி எழுகின்றன. அன்பன் ஆகும் தன தாளடைந்தார்க்கெலாம் செம்பொன் ஆகத்து அவுனனுடல் கண்டவன் நன்பொன் ஏய்ந்த மதிள்குழி திருக்கண்ண புரத்து அன்பன் நாளும் தனமெய்யாக்கு மெய்யனே. (திருவாய்மொழி) கடவுளை அன்பன் என்று கம்மாழ்வார் இங்கனம் குறிக் திருக்கிருர், இன்ப மூர்த்தியாகிய இறைவன் தன் பால் அன்பால் உருகியஉயிர்களுக்கு அன்பு சாந்து பேரின் பகலனே அருளுகின் ருர். புத்தியை வாங்கிகின் பாதாம் புயத்தில் புகட்டி அன்பாய் முத்தியை வாங்க அறிகின்றிலேன முது சூர் கடுங்கச் சத்தியை வாங்கத் தரமோ குவடு தவிடுபடக் குத்திய காங்கேய னேவினே யேற்குஎன் குறித்தனேயே. - (கந்தர் அலங்காரம்) சித்தம் அன்பாய் அமையின் முத்தியின்பம் உண்டாம் என அருணகிரி நாதர் இவ்வாறு அருளியிருக்கிருர், இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. அன்பு உயிரின் சாம். அது செய்வதே பிறவிப் பயன். அன்பு இல்லாத பிறப்பு அவமேயாம். அன்புடையவன் இறைவனுக்கு இன்பக் கணி. இறைவனே கினைவதே இன்பப் பேரும். அன்பு இன்மேல் யாவும் இன்ரும். அன்பை எங்கும் செய்க. அன்பால் அதிசய மகிமை விளைகின்றது. எல்லாம் ஈசன் என கினைக. உள்ளம் உருகின் பேரின்ப வெள்ளம் பெருகும். நடன-வது கேயம் முற்றிற்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/230&oldid=1325213" இலிருந்து மீள்விக்கப்பட்டது