பக்கம்:தரும தீபிகை 2.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. தி னை வு. (543 'கல்வினையின் விளைவால் பல பிறவிகளின் முடிவில் மனி தர்க்கு மோட்சத்தில் இச்சை உண்டாகின்றது' என பைங்கல உபநிஷதம் இங்கனம் கூறியுள்ளது. ஒரு மனிதனுக்கு மறுமை கோக்கம் வருவது எவ்வளவு அருமை என்பது இதல்ை அறியலாகும். புனித இயல்புகளைப் பழகிவரின் புண்ணியம் பழுத்து வரும். அதஞ்ல் உயர் கலங்கள் யாவும் ஒருங்கே உளவாம்; இவ் வுண்மையை ஒர்க்து தெளிக. தயாம் நீங்கி உயர் கதி யடைய வேண்டின் உள்ளம் உயர வேண்டும். அதனை நல்ல எண்ணத்தால் பேணி கலம்பல கானுக. 380. தன்னே கினேங்து தலைவன் தனையுணர்ந்தால் முன்னே உயர்வெல்லாம் முன்தோன்றும்-பின்னேயிப் பொல்லாப் பிறப்பில் புகுந்த துயரங்கள் எல்லாம் ஒழியும் எளிது. (ώ) இ-ள் தன்னுடைய உண்மை தெளிக்க தலைவனை உணர்த்தால் முன்னேய உயர்வு எல்லாம் முன்னே தோன்றும்; தோன்றவே பிறவித்துன்பங்கள் யாவும் உடனே ஒழித்து போம் என்றவாறு. தன்னே என்றது ஆன்மாவை தலைவனே என்றது. பாமான்வை. உலகம் உயிர் பாம் என்னும் மூன்று பொருள்கள் உள்ளன. மலை கடல் கிலம் முதலாக விரித்து டாந்துள்ள உலகத்தைக் கண் எதிரே நேரே காண்கின்ருேம். அகில உலகங்களையும் அனந்த வே கோடிகளையும் கதிர் ஒளிகளையும் விதி முறையே இயக்கி வருகிற ஒரு உயர் பொருள் அதிசய ஆற்றலும் அளவில் இன்பமும் உடையதாய் யாண்டும் கித்தியமாய் எங்கும் கிறைத்திருக்கிறது என்று கருதிக் கொள்கின்ருேம். இந்த உலக மாயை நீங்கிய பொழுது உயிர் அந்த ஆதி மூலப் பொருளைத் தோய்த்து கொள்ளுகிறது என வேதங்கள் ஒதி வருகின்றன. சீவனுக்கும் ஈசுவாலுக்கும் உள்ள உற வுரி மையைச் சிறிது உணரினும் மற்றப் பக்க பாசங்கள் யாவும் ஒழித்து அக்கமிலின்பத்தை மேவி மகிழும். தன் மெய்யான கோலத்தை உணர முடியாதபடி மூல மாயை மறைத்திருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/252&oldid=1325235" இலிருந்து மீள்விக்கப்பட்டது