பக்கம்:தரும தீபிகை 2.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. தி லை. 651 புலன் ஐந்தும் தானே பொரமயங்கிச் சிங்தை அலமங் துழலும் அடிமை-கலமிகுந்த சித்தான மோன சிவனேகின் சேவடிக்கே பித்தாளுல் உண்டோ பிறப்பு. (தாயுமானவர்) புலன் வசப்பட்டால் உயிர் புலையாய் அலமருகின்றது; அவ் வழி ஒழியின் அறிவு தெளிவடைந்து இறை அருள் எய்திப் பிறவி தீர்த்து ஆன்மா பேரின்பம் அடைகின்றது என இவை அறிவுறுத்தியுள்ளன. உயிர் உருக்கங்கள் உனா வுரியன. பக்தியால் சிக்கம் சுத்தி ஆகின்றது; அதனல் சத்துவ ஞானம் விளைகின்றது; அக்க உத்தம நிலையில் உதித்த உணர் இசைகள் புத்தமுதங்களாய்ப் புதிய தெளிவுகளை நல்கி அரிய இன்பங்களை அருளி இனிய ஆறுதல்கள் புரிந்து வருகின்றன. தலைமையாய் உள்ள జు என்றது. பாமாயிருந்த உயர் மேன் மையை. உனது உண்மைநிலையை உணர்ந்து கொள்; கொண்டால் துன்பத் தொடர்பு தொலைந்து இன்ப வெள்ளம் பெருகும் என்க. _ 888. முன்னம் இழந்த முதலே அடையாமல் என்ன அடையினுமென் ஈனமே-அன்னதுகேர் 'உம்ருன் உடம்பெடுத் தோயா துழங்தபயன் பெற்ருன் பிறவான் பிற. (க.) இ_ள் முன்பு இழந்து போன உயர்க்க முதலே அடையாமல் வேறு எதை அடைந்தாலும் அவமேயாம் இழக்க முதலை அடைந்தவன் பிறந்த பயனைப் பெற்ற சிறந்த பாக்கியவான் ஆகின்ருன்; அடை யாதவன் கடையாய் இழித்து கழித்து படுகின்ருன் என்றவாறு. இது அடைய வேண்டியதை அடைக என்கின்றது. உயிரினங்க்ள் எல்லாம் உயர்வையும் உய்தியையுமே காடி உழலு ன்ெறன. பகுத்து அறியும் உணர்வு இல்லாமையால் மிருகம் பறவை முதலிய பிராணிகள் யாவும் உயர்ந்த குறிக்கோள் இன்றி உண்பதும் உறங்குவதுமாய்க் காலத்தைக் கழித்து அழிந்து போகின்றன. கருதி யுணர்வன உறுதி கலங்களைக் காண்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/260&oldid=1325243" இலிருந்து மீள்விக்கப்பட்டது