பக்கம்:தரும தீபிகை 2.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

656 த ரும தீ பி ைக. 385. காம வெகுளி கடிங்து கருதரிய ஏம நிலையை எதிரறிந்து-காம உருவங்க ளாகி ஒளிர்கின்ற உண்மை உருவுணரின் உய்தி உறும். (டு) இ-ள் ஆசையும் கோபமும் ஒழித்து எளிதில் அறிய முடியாத பாம இன்ப நிலையை எதிர் உணர்ந்து, பெயர் உருவங்களாய் உலகில் விரிந்து தோன்றும் உண்மை கிலையைத் தெளியின் உய்தி வெளியாம் என்க. இது உய்தி உறும் வகையை உணர்த்துகின்றது. ஆன்மா இயல்பாகவே மேன்மை ஆனது; அது தேகங்களை மருவிய பொழுது போகங்களை விழைந்து பலவகையான மோகங் களை அடைந்து சார்க்க தன் வண்ணமாய்க் காழ்த்தும் உயர்த்தும் சவித்து உழலுகின்றது. சலிப்புகள் வினே வலிப்புகளாய் விரிங் + துள்ளன. சூரியனை மேகம் மறைப்பது போல ஆன்ம சோதியை மோக மயக்கங்கள் மறைத்து மூண்டு படர்ந்து நீண்டுகிற்கின்றன. காற்று விச்சால் மேகங்கள் கலைகின்றன; ஞான வாடையால் மோகங்கள் ஒழிகின்றன. மாய மயக்கான யே இயல்புகள் மனிதனேக் கீயன் ஆக்கிக் தாழ்த்தி விடுகின்றன. துன்பக் கொடர்புகள் எல்லாம் எண்ணக் தின் தீமைகளால் விளைந்துள்ளன. காமமும் வெகுளியும் ைேம என்னும் பேய்க்கு இாண்டு கால்களாய் இணைக்கிருக்கின்றன. ஒன்றை ஒன்று மருவி என்றும் சோடியாய் இசைங் கிருக்கலால் யாண்டும் சேர்த்துச் சொல்லப் படுகின்றன. இணைப்பு பாசப் பிணைப்பாய்ப் பகிக்கது. கனது ஆசைக்குப் பங்கம் வக்க இடக்கில் மனிதனிட மிருக்து கோபம் எழுகின்றது. ஆசை அழியின் கோபமும் ஒழி. ன்ெறது. இந்த இரண்டும் ஒருங்கே ஒழிக்க பொழுதுதான் உயிர் புனிதமாய் இனிய ஒளி பெ.துகின்றது. காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெடக்கெடும் கோய். (குறள், 360)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/265&oldid=1325248" இலிருந்து மீள்விக்கப்பட்டது