பக்கம்:தரும தீபிகை 2.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

--- 39. தி லை. 661 ஒருவன் பெரிய சாதி என்று தன்னக் குறித்துப் பெருமை பேசுகின்ருன்; அங்ங்னம் பேசுகின்றவனேநோக்கி எதிரேஒருவன் கேட்கின்ருன்: 'சாதி என்ருல் என்ன? எதல்ை அது பெரியது? அதல்ை உனக்கு வந்தது யாது: ' என்னும் வினுக்களுக்கு அவன் விடை கூற வேண்டும். அங்ங்னம் கூற கேரின் அவன் கொண்டி ருந்த குலச் செருக்கு Gتj9ا- வாங்கிப் போகும். முன்னம் மாடாய் இருந்தவன் இப்பொழுது மனிதனய்வந்திருக்கலாம்; இதில் செருக் குவது என்? முன்னும் பின்னும் முடிவும் படிவும் எண்ணிப்பார். பிறந்த பிறப்பால் உயிர்க்குச் சிறந்த உறுதி சலனச் செய்து கொள்ளுகின்றவனே உயர்ந்த பிறப்பினன் ஆகின்ருன்; அல்லா தவர் எல்லாரும் இழிந்த சாதியினாாய்க் கழிந்து போகின்ருர். இழிந்த போகின்ற ஊனமான தேக நிலையை மாத்திரம் பற்றிச் செருக்கி நிற்பவர் ஞானகுனியாய் ஈனம் அடைகின்றர். என்னேத் தொடாதே ஒதுங்கிப் போ என்று பிறரைத் தாழ்த்திச் சொல்லுகின்றவன் பின்பு தாழ்த்த சாதியானுய் ஒதுக் கப்படுகின்ருன். தீண்டாதார் என்று இன்று தியங்கி கிம்பவர் யார் தெரியுமா? நாங்கள் மேலான சாதியார், நீங்கள் எல்லாரும் கீழானவர்கள் எங்களை யாரும் திண்டலாகாது” என்று குலத் திமிர் மண்டி முன்பு கொடுமை புரிந்து வந்தவரே. ႕ ஒத்த மக்கள்பால் உரிமை செய்யாமல் பித்தமயக்கால் பிழை புரிந்தவர் பிழைபடலாயினர். பிறரைத் தாழ்த்தினவர் தாழ்ந்து வீழ்த்தார்; தாழ்வாய்த் தளர்த்து கவித்தவர் உயர்ந்து வாழ்ந்தார். வினேயின் முடிவுகள் அதிசயமான விைேதங்களுடையன. யாரையும் எவ்வகையிலும் யாதும் இகழ்த்து பேசாதே; உனக்கு ஏதேனும் சில வசதிகள் வாய்த்தால் அவற்றைக் கண்டு செருக்காதே; அவை கொண்டு அபலாருக்கு உதவி செய்தருளுக. எய்திய பிறவியால் உய்தி பெறுவதே உயர் பிறப்பு; அல்லா தது இழி கழுதைப் பிறப்பு என மேலோர் வைது மொழிக்கிருக் கிரு.ர். இயல்பிலும் செயலிலும் பன்றி நாய் கழுதை முதலிய ஈன மிருகங்களாய் இழிந்து கின்று கொண்டு தம்மை உயர்ந்த சாதி யினர் என்று மனிதர் செருக்கிப் பேசுதல் மிகவும் அருவருப்பே பாம். ஞானக் கேடும் மானக் கேடும் மருவி வழுதல் பெரிதும் ஈனமான பரிதாபங்களாய் யாண்டும் இழிந்து முடிகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/270&oldid=1325254" இலிருந்து மீள்விக்கப்பட்டது