பக்கம்:தரும தீபிகை 2.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

662 த ரும தீபிகை. உயிர்க்கு உறுதி செய்து கொள்வது எதுவோ அதுவே புனி தமான உயர் பிறப்பு ஆகின்றது; அல்லாததைப் பொல்லாதது என்று எல்லோர் கருதி வருக்துகின்றனர். குலம் பொல்லேன் குணம் பொல்லேன்: குறியும் பொல்லேன்: குற்றமே பெரிதுடையேன். கோலமாய நலம் பொல்லேன்; நான் பொல்லேன், ஞானி அல்லேன்: நல்லாரோடு இசைக்திலேன்: நடுவே கின்ற விலங்கல்லேன் விலங்கல்லாது ஒழிந்தேன் அல்லேன்: வெறுப்பனவும் மிகப்பெரிதும் பேச வல்லேன்: இலம்பொல்லேன், இரப்பதே ஈய மாட்டேன்: என் செய்வான் தோன்றினேன் ஏழையேனே. (அப்பர்) குலத்திடையும் கொடியன் ஒரு குடித்தனத்தும் கொடியேன் குறிகளிலும் கொடியன்அன்றிக் குணங்களிலும் கொடியேன் மலத்திடையே புழுத்தசிறு புழுககளிலும் கடையேன் வன்மனத்துப் பெரும்பாவி வஞ்சநெஞ்சப் புலேயேன் நலத்திடைஓர் அணுவளவும் நுண்ணுகிலேன் பொல்லா காய்க்குங்கை தோன்றநின்றேன். பேய்க்கு மிக இழிந்தேன்: நிலத்திடைகான் என்பிறந்தேன் கின் கருத்தை அறியேன் நிற்குணனே நடராச நிபுணமணி விளக்கே. (இராமலிங்கர்) குலந்தான் எத்தனையும் பிறந்தே இறங்து எய்த்து ஒழிந்தேன்: நலந்தான் ஒன்றுமிலேன்: கல்லதோர் அறம் செய்துமிலேன்: சிலந்தோய் நீள்முகில்சேர் நெறியார் திருவேங்கடவா! அலங்தேன் வந்தடைங்தேன் அடியேனே ஆட்கொண்டருளே. (திருமங்கையாழ்வார்) குலங்தாங்கு சாதிகள் காலிலும் கீழ் இழிந்து எத்தனை நலந்தானிலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும் வலந்தாங்கு சக்கரத் தண்ணல் மணிவண்ணற்கு ஆள்என்று உள் கலந்தார் அடியார்தம் அடியார் எம் அடிகளே. (நம்மாழ்வார்) உயர்ந்த ஞான சீலர்கள் உலக கிலையில் அமைந்துள்ள குல கலங்களைக் குறித்து இவ்வாறு கூறியுள்ளனர். ஆன்மஊதியத்தை அடைந்து கொள்ளுகின்றவனே மேலான சாதியான்; அவன் பிறப்பே சாலவும் உயர்ந்தது; அவனே தெய்வத் திருவினன் என்னும் உண்மையை இங்கே உணர்ந்து கொள்கின்ருேம். மனித வாழ்வு கிலையில்லாதது; விரைவில் அழிவது; அது அழித்து படுமுன் அடைய வேண்டியதை அடையாமல் இடையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/271&oldid=1325255" இலிருந்து மீள்விக்கப்பட்டது