பக்கம்:தரும தீபிகை 2.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. நியமம். 675 அழிவி லாததற் பதங்கனே மைக்தனே! அகமுகத்தவர் சேர்வர் வழிநடப்பவர் பராமுகம் ஆயினுல் மலர்ந்தகண் இருந்தாலும் குழியில் வீழ்வர்காண் அப்படி வெளிமுகம் கொண்டு காமிகள் ஆளுேர் பழித ரும்பிற விக்கடல் அழுந்துவர் பரகதி அடையாரே. (கைவல்லியம், 53) உள் முகமாய்த் கம்மை கோக்கிய ஆன்மஞானிகள் செறியே சென்று கிறை பேரின்பம் பெறுகின்ருர்; வெளி முகமாய்க் கணி மயக்கில் கிரிகின்றவர் பழி வழிகளில் அலைந்து படு துயரங்களை அடைகின்ருர்; எனவே வழி தவறினவாது அழிவும் இழிவும் விழி தெரிய வங்தன. வழி டைப்பவர் பராமுகம் ஆயினுல் விழி யிருந்தாலும் குழி யில் வீழ்கின்ருர்; அதுபோல் கல்ல.அறிவு இருந்தாலும் நெறியை விட்டு விலகினல் அழி துயரில் வீழ்ந்து இழிவடைகின்றனர். மாமான மோக மயக்கங்கள் பல உலகில் பாவி யிருக்ன்ெ றன. அவ் வெறிகளில் விழாமல் பொறிகளை அடக்கி நல்ல செறி களில் கடப்பவர் உயிர்க்கு உறுதி புரியும் உத்தமாகின்றனர். தமக்கு சன்மையை நாடுகின்றவர் திய புலைகளில் யாதும் கோயா மல் தாய நிலைகளில் தோய்த்து கொள்கின்ருர், நியமம் என்பது புனிதமான மன அமைதி ஆதலால் அதனை யுடைய மனிதன் இனியகுய்த் தனி மகிமை அடைகின்ருன்" ஞான சீலங்களுள் இஃது ஒர் அங்கமாய் அமைந்துள்ளது. இயமம், கியமம், ஆசனம், பிாாளுயாமம், பிரத்தியாகாாம், தானே, தியானம், சமாதி என்பன யோக கிலையங்களாய் மதிக் கப்பட்டுள்ளன. குறித்த காமங்கள் குணங்களால் அமைந்தன. இயமம். பொய்கொலை களவே காமம் பொருள் நசை இவ்வகை ஐந்தும் அடக்கியது இயமம். (1) நியமம். பெற்றதற்கு உவத்தல் பிழம்புகனி வெறுத்தல் கற்பன கற்றல் கழிகடும் தாய்மை பூசனேப் பெரும்பயம் ஆசாற்கு அளித்தலொடு நயனுடை மரபின் கியமம் ஐங்தே. (2)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/284&oldid=1325269" இலிருந்து மீள்விக்கப்பட்டது