பக்கம்:தரும தீபிகை 2.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. நியமம். 683 என்னும் உண்மையை ஈண்டு உணர வேண்டும். செய்த போது அன்றி அது சேரல் அரிது. என்றது உள்ளம் கனித்து கல்ல செயல்களைச் செய்யாவழி எவ்வகையானும் சுக போகங்களே அடைய முடியாது என்பது அறிய வந்தது. இனிய கருமங்களே இருமையும் தருகின்றன. பொறி புலன்களைப் புனித நெறிகளில் செலுத்தி மனித சமுதாயத்துக்கு இக கலங்களைச் செய்து வருபவன் தானகவே உயர் மகிமைகளை அடைகின்ருன். இன்பமும் மேன்மையும் உன் கைவசம் உள்ளன; அன்பு நலம் உடையய்ை பாண்டும் கல்ல எண்ணங்ககளயே எண்ணி, இனிய மொழிகளையே பேசிப், புனித மான செயல்களையே புரிந்து வருக இறைவன் அருளும் L JITLD பாக்கியங்களும் விசைந்து பெருகி கிலையான இன்ப கலங்களைத் தலைமையாக உனக்கு உதவியருளும். இனிய வினையால் மனிதன் புனிதன் ஆகின்ருன். உரியதைச் செய்து உய்தி கானுக. 395 எண்ணுகின்ருர் இன்பமுற எண்ணி அதற்குரித்தாம் புண்ணியம்ஒன் றேனும் புரிகிலார் -பண்ணுவதோ துன்பமுறு பாவத் தொழிலே இவர்என்ருே இன்பம் அடைவ தினி. (டு) இ-ள் எல்லாரும் இன்பம் அடைய வேண்டும் என்றே எண்ணு ன்ெருர், ஆனல் அதற்கு உரிய புண்ணியங்களைச் செய்யாமல் பாவங்களையே செய்து பாழாகின்ருர் என்றவாற. இது கருதியதை எய்தும் உறுதி காட்டுகின்றது. சீவர்களுடைய ஆசைகளும் செயல் இயல்களும் விபரீத மானவை. மாறுபாடுகள் மண்டி மயல் மிகுந்துள்ளன. தங்களுடைய வாழ்வில் உயர்ந்த போக கலங்களே அனுபவிக் கவே யாவரும் யாண்டும் ஆவலுறுகின்றனர். அங்கனம் உம்மம் எங்கும் பிழைபாடுகளே பெற்றுப் பேதும்ம உழலுகின்றனர். இன்பத்தை எல்லாரும் அவாவி நிற்கின்றனர். துன்பத்தை என்றும் அஞ்சி வெறுக்கின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/292&oldid=1325279" இலிருந்து மீள்விக்கப்பட்டது