பக்கம்:தரும தீபிகை 2.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

692 த ரும தீ பி ைக. இந்த மாசுகள் படின் அம் மனித வாழ்வு சேம் அடையும். திய மொழிசெயல்கள் தீவினைக ளாய் உயிரை மாய வருத்தி மரபழிக்கும்-ஆயபிழை சேராமல் காக்கும் திருவுடையான் எஞ்ஞான்றும் பேராத இன்பம் பெறும். தன்னுடைய சொல்லையும் செயலையும் பழுது படுத்தினவன் தன் உயிரைப் பாழ் படுத்தினவளுகின்ருன்; அவற்றைப் புனித மாகப் பேணி வருபவன் பெரிய மகிமைகளை அடைகின்ருன். தான் பேசுகின்ற பேச்சுகளும், செய்கின்ற செயல்களும் மாசு மறுக்கள் மருவாமல் யோசனையுடன் ஒம்பி வர வேண்டும்; அவ்வாறு வரின் அவ்வாழ்வு தேசு மிக வுடையதாய் அவன் ஈசன் அருளை எய்துகின்ருன். புனிதம் புக மனிதன் உயர்கின்ருன். தன்பால் கிகழ்வன பிற வுயிர்களுக்கு யாதும் இடர் இன்றி எவ் வகையும் இத நலங்களாய் இயைந்த வரின் அவை இன்ப கிலேயங்களாய்ப் பெருகி இருமையும் அருளுகின்றன. கிலத்தைப் பண்படுத்தி உழுது உாம் பாப்பிப் பருவம் அறிந்து பயிர் செயின் விளைவு அதிகமாம்; மனிதன் மனத்தைப் பண்படுத்தி அன்புலம் கோய்ந்த ஆருயிர்க்கு இகம் புரிக் து வரின் அரிய இன்ப கலங்கள் பெரிதாய் விளைந்து வரும். தன்னுடைய எண்ணமும் செயல்களும் எவ்வழியும் இனி யனவாகவே நிலவி வா ஒருவன் ஒழுகிவரின் அவன் புனிதன் ஆகின்ருன்; ஆகவே புண்ணிய போகங்கள் யாவும் அவனுக்குத் தனியுரிமைகளாய் இனிமை புரித்தருளுகின்றன. தன் கையே தனக்குத் துணை என்பது பழமொழி. பல உண் மைகளை இஃது உணர்த்தியுள்ளது. மனித வாழ்க்கையின் மரு மங்களைச் சிறிய வாக்கியங்கள் தெளிவாக்கி ஒளி மணிகள் போல் உலக மொழிகளில் சிதறிக் கிடக்கின்றன. தான செய்கின்ற இனிய கருமங்களே புனித சருமங்களாய மனிதனுக்குப் போகங்களை யருள்கின்றன. தன்னை உயர்த்தி உய்தி கலம் அருளுவது கான் செய்த வினையே ஆதலால் அதுவே அவனுக்கு இனிய உறுதித் துணையாம்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/301&oldid=1325289" இலிருந்து மீள்விக்கப்பட்டது