பக்கம்:தரும தீபிகை 2.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. அமைகி. 703 அடுத்த நாடிகள் ஆங்கொரு மூன்றினும் விடுத்து வாங்கியும் மேவ கிறுத்தியும் தடுத்தும் வாயுவைத் தன்வசம் ஆக்கில்வாய் மடுத்திடாது மனமும் வசப்படும். ( 3 ) மனம் ஒருத்தன் வசப்படுமேல் அவன் பினே வருத்தும் பிறப்பை அடைந்திடான்: மனம் ஒருத்தன் வசப்படாது ஒடுமேல் கனி பிறப்பிடை நாளும் சுழலுமே. (4) (பிரபுலிங்க லீலை) மனத்தை அடக்கி ஆளுவது அரிது; அதனே அடக்கினவன் பிறவி நீங்கிப் பெரும்பகம் அடைவான் என்பதை இகளுல் அறிக் த கொள்கின்ருேம். மனம் அடங்கு கற்குரிய சாகன முறைகள் இதில் குறிக்கப் பட்டுள்ளன. குறிப்புகளைக் கூர்ந்த ஒர்ந்து கொள்க. மூக்கின் வழியே இயங்கி வருகின்ற மூச்சு சீவ ஒட்டமாயுள்ளது. அதில் காட்டக்கைச் செலுத்தி வரும் அளவு மனத்தின் ஒட்டக்கை கி.மத்தி உய்தி காண்கின்றனர். உள்ளம் அடங்கின் உலகம் அவன் பால் அடங்கும். ஒரு கிலையின்றி எப்பொழுதும் அலைந்து கொண்டே வரு கின்ற மனம் ஒருவனுக்கு வசமாய் அடங்கி யிருக்குமாயின் அவனை உலகம் உவர்து கொழ நேர்கின்றது. உலக மக்கள் எல்லாாையும் கனக்கு அடிமைகள் ஆக்கி யாண்டும் தனித் தலைமையில் நீண்டு கிற்கின்ற மனத்தைத் கனக்கு இனிய அடிமையாக்கி ஒழுகுகின்றவன் அரிய அகிசய கிலையினன் ஆதலால் அவனை எவரும் துதி செய்து கொழு கின்றனர். உள்ளம் உரிமையுற உலகம் வழிபடுகின்றது. தன் மனத்தை அணு அளவு ஒருவன் அடக்கி ஒழுகுவ யிைன் அவன் உலகத்தை மலை அளவு அடக்கியாளும் வல்லமை யை அடைகின்ருன். மனம் சிறிது அடங்கிய வுடனே மனிதன் பெரிய மகான் ஆய் அரிய கிலேயில் உயர்கின்ருன். மனத்தின் வழியே இழிந்து போகின்றவன் சிறியவனுய் இகழ்ச்சி யை அடைகின் முன் , அங்ானம் இழியாமல் அதனை க் கன் வசமாக்கி கிற்பவன் பெரியவனும் உயர் மதிப்பு.ணுகின்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/312&oldid=1325301" இலிருந்து மீள்விக்கப்பட்டது