பக்கம்:தரும தீபிகை 2.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. மேன்மை. 427 மிக்க பகுத்தறிவு மக்களிடம் அமைந்திருத்தலால் சீவ கொடிகளுள் அவர் சிறந்து கிற்கின்ருர். அங்கனம் சிறந்த பிறப் பினாய் வந்துள்ள மனிதர் குழுவில் கல்வியறிவு பெற்றவர் _யர்ந்து விளங்குகின்ருர். 'விலங்கொடு மக்கள் அனேயர் இலங்குநூல் கற்ருரோடு ஏனே யவர். ' (குறள், 410) கற்றவருக்கும் கல்லாதவர்க்கும் உள் ள வேற்றுமையை அடிகள் இப்படி அளங்து காட்டியிருக்கிரு.ர். உருவத்தால் ஒத்த பிறப்பினாாயினும் உணர்வினல் தம்முள் அவர் ஒவ்வார் என்பதை இவ்வாறு விளக்கி யருளினர். மிருகங்களினும் மனிதர் எவ்வளவு உயர்ந்துள்ளாரோ, அவ் வளவு கல்லாதவரினும் கற்றவர் உயர்ந்திருக்கின்ருர், உயர்வு தாழ்வுகளுக்கு உற்ற காாணத்தை ஊன்றி நோக்கும்படி இது உணர்த்தியுள்ளது. கல்வியால் அறிவுவளர்ந்து ஒளிபெறுகின்றது; அதல்ை மனிதன் உயர்ந்து மகிமை யு.அகின்ருன். கற்றவரே உயர்ந்தோர் என்றதில் எகாரம் மற்றவாது தாழ்வு கிலையை வெளிப்படுத்தி விழ்வினை விளக்கியது. அரிய பிறவியும் உரிய கல்வி இன்மையால் சிறுமை அடைய சேர்ந்தது; அதனைப் பருவம் கவருமல் மருவிப் பெருமை பெறுக. சிறந்த மனிதனய்ப் பிறந்து உயர்ந்த கல்விமான் ஆயினும் ஒழுக்கம் இலயிைன் அவன் விழுப்பம் உருன்; ஆகவே அந்தச் சிலமுடையவர் கற்றவரினும் மேலானவாாய் மேன்மை பெற லாயினர். ஒழுக்கம் உணர்வுக்கு ஒளியாய் உய்தி புரிகின்றது. முற்றவே தேர்ந்து ஒழுகு சீலர் என்றது தாம் கற்ற கல்வியின் பயனே நன்ருக ஆராய்ந்து அறிந்து கெறி வழுவாமல் ஒழுகும் அமைதியாளர் என அவரது தகைமை கெரிய வந்தது. விழிக்கு ஒளி போல் கல்விக்கு ஒழுக்கம் எழில் செய்துள்ள மையால் அதன் விழுமிய நிலைமையும் அதனையுடையவாது பெரு மையும் எளிது தெளிவாம். சீலம் அற்ற கல்வி ஒளி அற்ற விழி போல் பழியுற்று உழலும், ஒர்க்க அடங்கினர் என்றது ஞானிகளே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/36&oldid=1325012" இலிருந்து மீள்விக்கப்பட்டது