பக்கம்:தரும தீபிகை 2.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. மேன்மை. 429 புன்மரம் நெளிபுழுப் புள் விலங்கு எனும் பன்மைய துயர்செயும் பவங்கள் தப்பியே வன்மை கொள் கிலமிசை மக்கள் ஆகுதல் நன்மைகொள் உயிர்க்கலால் அரிது கங்தியே. (பிரபுலிங்கலீலை) _ரிதாம் பிறப்புள் உயர்மானிடத்தின் அடைவுற்று வைகல், அதனின் அரிதாகும் நல்ல குலனிற்பிறத்தல், அறிவாளர் ஆகல் அதனின் அரிதாகும்; வேதமுதலாய்ந்து முக்கண் அமலற்கலத்தல் அகனின் அரிதாம், உயர்ந்த குலனுற்றும் வீனில் அழிவார் இதென்கொல்அறிவே! (தணிகைப் புராணம்) உற்ற யோனிகள் தம்மில் உற்பவி யாமல் மானுட உற்பவம் பெற்று வாழுகல் அரிது; மற்றது பெறினும் மாயைசெய் பெருமயக்கு அற்ற ஞானிகளாய் விளங்குகல் அரித வீடுறும் அறிவுபின் பற்று மாறரி கிங்குனக்கிவை பண்பிைேடு பலித்தவே. (பாரதம்) அரிதே மனுடப் பிறப்பின ராய்வால், அங்கதினும் அரிதே பலகலை கற்றவர் ஆதல், அதனினுமற் றரிதே கவிகள் அமைப்பவர் ஆதல், அதனினுமம் றரிதே பல நூல் செயவல்லர் ஆதல் அவனியிலே. (அக்கினி புராணம்) உயர்குடி கணியுள் தோன்றல்; ஊனமில் யாக்கை ஆதல்: மயர்வறு கல்வி கேள்வித் தன்மையால் வல்லர் ஆதல்: பெரிதுணர்வறிவே யாதல்; போறம் கோடல் என்ருங்கு அரிதிவை பெறுதல் ஏடா பெற்றவர் மக்கள் என்பார். (வளையாபதி) அரியது கேட்கின் வரிவடி வேலோய்! அரிது அரிது மானிடர் ஆதல் அரிது: மானிட ராக மருவி வந்தாலும் மூங்கையும் செவிடும் கூனும் குருடும் பேடும் நீங்கிப் பிறத்தலும் அரிதே; பேடு நீங்கிப் பிறந்த காலேயும் ஞானமும் கல்வியும் கயத்தல் அரிதே; ஞானமும் கல்வியும் கயங் த காலேயும், தானமும் தவமும் தரித்தலும் அரிதே; தானமும் தவமும் தரித்தார்க் கல்லது வானவர் நாடு வழிதிற வாதே. (ஒளவையார்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/38&oldid=1325014" இலிருந்து மீள்விக்கப்பட்டது