பக்கம்:தரும தீபிகை 2.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432 த ரு ம தி பி கை. முன்னது மன நிலையைக் குறித்தது; பின்னது வாக்குகலனே உணர்த்தியது. திறம்பல்= பிறழ்தல், மாறுபடல். சத்துருக்களிடத்தும் உத்தமர் ஒழுங்கு தவறி கடவார் என்றது செயல் ஒழுக்கங்களை விளக்கியது. ஒன்னலர் = பகைவர். கறை=குற்றம். ஒன்னலர் இன்னல் நிலையினர் ஆகலின் உம்மை அவர் வெம்மை தெரிய வந்தது. கொடிய விரோதிகளிடமும் பெரியோர் நெறி கடத்து யாதும் காவு புரியார் என்றமையால் அவரது அருச் திறலாண்மையும் பெருக் ககைமையும் அறிந்து கொள்ளலாம். எள்ளல் எ னும் புன்மை என்றது இகழத்தக்க இழி செயல்களை. யாண்டும் புகழத் தக்க நன்மைகளையே புரிந்து வருவ ான்றிப் புன்மைகளே மறந்தும் அவர் கருதார். பாதும் பொருங் கார் என்றது தீமைகளையும் சிறுமைகளையும் அவர் அருவருத்து விலகும் அமைதி அறிய வங்தது. பிறருடைய பிழைகளே எவ்வழியும் எவரிடமும் பேசாமல் இருப்பது உயர் பெருங் ககைமைக்கு ஒர் உறுதியான அளவு கோல் ஆதலால் அவ்வுளவு செசிய அது இறுதியில் கின்றது. பிறர் தீமை சொல்லா கலத்தது சால்பு என்ற தேவர் அருள் மொழியின் பொருள் கிலை ஈண்டு ஊன்றி உண ஷரியது. உள்ளம் கலங்கலும், உரை திறம்பலும், கள்ளம் புரிதலும் , கறை செய்தலும், புன்மை மருவலும், புறங் கூறலும், புல்லிய செயல்கள் ஆகலால் இவற்றையுடையவர் சிறியர் என கிற்கின்ருர்; இவை இல்லாதவர் பெரியர் என மிளிர்கின் ருர். மனவுறுதி, வாய்மை, நேர்மை முதலிய சீர்மைகள் தோய்ந்து யாவரும் சீர்மையுற வேண்டும் என்பது கருத்து. 296. ஆசில் புகழ்வருவ தாயின்தம் ஆருயிரும் வீசத் துணிந்து விரைகுவார்-சேப் பழி எனினே வான்வரினும் பற்ருர்உள் அஞ்சி ஒழிவர் பெரியர் உணர். (சு) இ-ள் சிறந்த பெரியோர்கள் புகழுக்காகக் கமது அரிய உயிரையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/41&oldid=1325017" இலிருந்து மீள்விக்கப்பட்டது