பக்கம்:தரும தீபிகை 2.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. மேன்மை. 433 கொடுத்து விடுவர்; சுவர்க்க போகம் வருவதாயினும் பழிபட அவர் இசையார் என்பதாம். ஆக இல் புகழ் என்றது குற்றம் அற்ற நல்ல ர்ேக்கியை, ஆசு=குற்றம். மாசுபடாமல் வருவது தேசுடையதாம். புகழ் என்பது சிறந்த நன்கு மதிப்பு. உயர்க்கோளால் புகழ்ந்து பேசப்படுவது புகழ் என வந்தது. புண்ணியக்கின் மனமாய் மனிகாைக் கண்ணியப் படுத்தி வருதலால் புகழை எவரும் எண்ணி மகிழ்கின்ருர். பழி என்பது இழிவான தீமையை. உலகக்காாால் பழிக்கப் படுவது பழி என நேர்ந்தது. இது பாபத்தின் துணையாய் உயிர் களைப் பாழ்படுத்தி விடும். மேலோர் புண்ணிய சிலர் ஆதலால் யாண்டும் புகழையே பேணி ஒழுகுவார். அரிய உயிரினும் அதனே உரிமையாக அவர் கருதி வருகின்ருர். புகழ் வருவது ஆயின் தம் உயிரும் வீச விரைகுவார் என்றது மேன்மையாளாது உள்ளப் பான்மையும் உறுதி கிலேயும் உணா வந்தது. புகழும் புண்ணியமும் சீரியர் உரிமைகள் ஆகின்றன. பிறர்க்கு உபகாரமான நிலைகளில் கமது உடல் பொருள் ஆவி முழுவதையும் உவந்து கொடுக்கும் கொடைப் பண்பு பெரி யோர்களிடம் இயற்கையாக அமைக் கிருக்கலால் உரிய சமையம் வரும்போது உயிரை அவர் எளிதே உதவி விடுகின்ருர். பழி எனினே விான் வரினும் பற்றர் என்றது தேவபோகங் கள் யாவும் ஒருங்கே கருகின்றேன்; பழியான சிறிய ஒரு பிழை செய்க என இந்திரனே நேரே வந்து இாந்து வேண்டிலும் பெருக் தகையாளர் யாதும் இசையார் என்பதாம். அவரது ஆன்ம பரிபாகமும் அதிசய அமைதியும் எவரும் துதி செய்து கொழும்படி துலங்கி கிற்கின்றன. "புகழ்எனின் உயிரும் கொடுக்குவர்; பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர். ' (புறம், 182) "வாணன் வைத்த விழுகி தி பெறினும் பழி நமக்கு எழுக என்னுய் விழுகிதி ஈதல் உள்ளமொடு இசை வேட்குவையே. ' (மதுரைக்காஞ்சி) 55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/42&oldid=1325018" இலிருந்து மீள்விக்கப்பட்டது