பக்கம்:தரும தீபிகை 2.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 த ரும தீ பி ைக. இ.பி. என் உயிரை ஈஎனினும் ஈங்திடுவேன்; இப்பறவை தன் உயிரை ஈந்து தவியேன்காண்-உன்னுயிரை ஒம்பஈ தன் றிவே றுண்டிஒன்றும் கண்டிலேயோ தேம்பல் எவனே தெளி. வேடன்:- எப்படியாவது எனக்குப் புலால்உணவு தந்து விடுங்கள். புலையையே விரும்பி அக் கொலை வேடன் இங்கனம் கூறவே அரசன் தன் தொடையிலிருந்து தசையை அறுத்து எடுத்து அப் புருவின் எடைக்குத் துலையில் இட்டு கி.றத்துக்கொடுத்தான். ஒரு சிறிய பறவைக்காகத் தனது அரிய உயிரை உதவிய இப்பெரியவனே வானும் வையமும் என்றும் புகழ்ந்து வருகின்றன.

பிறந்தநாள் தொடங்கி யாரும் துலைபுக்க பெரியோன் பெற்றி, மறந்த நாள் உண்டோ: ' (இராமாயணம்)

என இராமனும் கான் பிறந்த குலத்தின் பெருமையை வியந்து இங்ானம்மகிழ்ந்திருக்கிருன். துலை=துலாக்கோல்,கிாாசு. இந்த அருள் வள்ளலுடைய மன நிலையை வியந்து புகழ்ந்து மேலோர் பலரும் உவந்து கூறி யிருக்கின்றனர். 'தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி அஞ்சிச் சிரை புக்க வரையா ஈகை உரவோன்." (புறம், 43) ..உடல்கலக்கற அரிந்து தசை இட்டும் ஒருவன் ஒரு துலேப் புறவொடு ஒக்க கிறை புக்க புகழும். (கலிங்கத்துப்பாணி) காக்கும் சிறுபுறவுக் காகக் களிகூர்ந்து து.ாக்கும் துலேபுக்க தாயோன். (விக்கிரம சோழன் உலா) யாவரும் இவ்வாறு வாயாாப் புகழ்ந்து போற்றச் சிபி உயர்ந்து திகழ்கின்ருன். அரிய செயலால் பெரியயிைனன். புகழை மெய் உடம்பு என்றது என்றும் கிலையாக கின்று கிலவும் நிலைமை கருதி. புகழாகிய மெய்யுடம்பைப் பேணும் மேன்மையாளர் பொய்யுடம்பை ஒரு பொருளாகப் பேணுர் என் பதை வையம் அறிய இவன் விளக்கி யருளின்ை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/45&oldid=1325021" இலிருந்து மீள்விக்கப்பட்டது