பக்கம்:தரும தீபிகை 2.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. மேன்மை. 439 கலை ஈலம் கனிந்து உலக நிலையில் தலைசிறந்து கிற்கும் பெரி யோர் கமது கிலைமையை மிகவும் கண்ணுான்றிப் பாதுகாத்து வய வேண்டும்; சிறிது வழுவினும் பெரிய பழியாய் تینٹ (گئے" வெளி வர நேரும். மேலோசைப் பொதுமக்கள் கூர்ந்து கவனித்து ஒர்த்து வரு கலால் அவரிடம் சிறிய ஒரு குறை காணினும் அதனைப் பெரிது படுத்தி அவர் பேச நேர்கின்ருர். அப் பேச்சுகள் ஏச்சுகள் ஆகின் |றன; ஆதலால் உயர்ந்தவர் எவ்வழியும் பிழை நோாமல் கம்மைப் பேண வேண்டியவாய்ப் பெருகி கிற்கின்ருர். மற்றையர் என்றது அறிவு நலம் குன்றிய இழிந்த மக்களை. இவரிடம் உள்ள குறைகளை உலகம் கவனிப்பதில்லை. இவாை எவரும் ஒரு பொருளாக மதியாமையால் இவருடைய குற்றங்கள் மறைந்து போகின்றன. பெருவரை நாட பெரியார்கண் தீமை கருங்ரைமேல் சூடேபோல் தோன்றும்-கருகரையைக் கொன்றன்ன இன்ன செயினும் சிறியார்மேல் ஒன்ருனும் தோன்ருக் கெடும். (நாலடியார், 186) பெரியோர் பிழை வெள்ளை மாட்டின் மேல் இட்ட சூடு போல் வெளியே தெளிவாய்த் தெரியும்; கொலை பாதகம் செய்யி உம் சிறியோர் பழி பாதும் தெரியாது போம் என்னும் இது ஈண்டு உனா வுரியது. கரை=வெள்ளை எருது. கன்றி முதிர்ந்த கழியப்பன் ளுள்செயினும் ஒன்றும் சிறியார்கண் என்ருனும் தோன்ருதாம் ஒன்ருய் விடினும் உயர்ந்தார்ப் படுங்குற்றம் குன்றின்மேல் இட்ட விளக்கு. (பழமொழி, 80) பல தீமைகளைச் செய்யினும் சிறியாரிடம் அவை தெரியாது மறையும்; பெரியோர் ஒரு சிறு பிழை செய்யினும் அது மலைமேல் விளக்குப் போல் கிலை ஓங்கி விளங்கும் என்ற இதல்ை அவரது கிலைமை புலனும். தாய வெள்ளை ஆடையில் கரிய புள்ளிபோல் சல்ல தாயரிடம் சிறிய வழுவும் பெரிதாய்த் துலங்கித் தெளிவாய்த் தெரிகின்றது. “The fairer the paper, the fouler the blot.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/48&oldid=1325024" இலிருந்து மீள்விக்கப்பட்டது