பக்கம்:தரும தீபிகை 2.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396 த ரு ம தி பி ைக. திரு=செல்வம், இலக்குமி. வெளியே ஒளிர்கின்ற திரு ஒன்று உள்ளமையால் உள்ளே மிளிர்கின்ற கிருவின் உருவம் இங்ாவனம் உரை செய்ய வங்தது. ஊக்கத்தை உள்ளத் திரு என்றது எல்லாச் செல்வங்களையும் இனிது அருளி மனிதனே அது மகிமைப் படுத்துதல் கருதி. 'ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு. ’’ (ஒளவையார்) என்றமையால் செல்வத்திற்கும்.அதற்கும் உள்ள உரிமை புலனும். ஆக்கங்கள் யாவும் ஊக்கங்களால் உளவாகின்றன; ஆகவே உலக போகங்களுக்கும், உயர்ந்த யோகங்களுக்கும் ஊக்கம் உயிர் கிலையாய் ஒளி செய்து கிற்கின்றது. செல்வத்தின் அதி தேவதை இலக்குமி. அங்கத் திருமகள் அருளுடையார் பெரு வளம் அடைந்து எல்லா கிலைகளிலும் பெருமையுடன் திகழ்கின்ருர். அாசர் விார் புலவர்கள் முதலிய தலைமையாளர் எவரிடமும் கிருவின் தேச விசியுள்ளது. மல்லல் நெடும் புவி அனைத்தம் பொதுநீக்கித் தனிபுரக்கும் மன்னர் யாரும் கல்வியினில் பேரறிவில் கட்டழகில் கிகரில்லாக் காட்சியோரும் வெல்படையிற் பகைதுரங்து வெஞ்சமரில் வாகைபுனை வீரர்தாமும் அல்லிமலர்ப் பொகுட்டுறையும் அணியிழைகின் அருள் நோக்கம் அடைந்துளாரே. (1) செங்கமலப் பொலந்தாதில் திகழ்ந்தொளிரும் எழில்மேனித் திருவேl வேலை அங்கணுல கிருள் துரக்கும் அலர்கதிராய் வெண்மதியாய் அமரர்க்கூட்டும் பொங்கமுலாய் உலகளிக்கும் பூங்கொடியே! நெடுங்கானில் பொருப்பில் மண்ணில் எங்குளே நீ அவண் அன்ருே மல்லல்வளம், சிறந்தோங்கி இருப்ப தம்மா! (காசிகாண்டம்) இலக்குமியைக் குறித்து அகத்தியமுனிவர் இவ்வாறு துதித் திருக்கிரு.ர். செல்வ கிலையமாகிய இத் திரு எல்லார்க்கும் பொது ஆதலால் எவர்க்கும் நேரே வந்து கனியே உதவி யருளாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/5&oldid=1324981" இலிருந்து மீள்விக்கப்பட்டது