பக்கம்:தரும தீபிகை 2.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 த ரும தி பி ைக. மினுக்குகளும் அகத்தின் அமைதியும் மகத்துவங்களாய் மருவு கின்றன. "சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில ர்ேமை யுடையார் சொலின். (குறள், 165) சீர்மைக்கும் சிறப்புக்கும் உள்ள வேற்றுமையை இதில் காண்க. இயற்கையில் உற்ற மாண்பும் செயற்கையில் பெற்ற மதிப்பும் இழி மொழியால் ஒழியும் என இது விழி தெரிய வைத்தது. விழுமம் மேன்மை சீர்மை சிறப்பு என்பன உயர்வின் வழிமொழிகளாய் அரிய இயல்புகளை இனிது விளக்கி யுள்ளன. எவ்வழியும் பெருக்ககைமை நிறைந்த சிறந்த மேன்மக்களே சீரியர் என்னும் பேரினுக்கு உளியாகின்றனர். மனித இனத்தில் அவர் அரிய மாட்சி யுடையாய் இனிது திகழ்கின்றனர். சிரியர் கெட்டாலும் சிரியரே சீரியர் அல்லாதார் கெட்டால் அங் கென்னகும்?-சீரிய பொன்னின் குடம்உடைந்தால் பொன்குைம் என்னுகும் மண்ணின் குடம் உடைந்தக் கால்? (மூதுரை, 18) வறுமை முதலிய சிறுமைகள் அடையினும் சீரியருடைய பெருமை குறையாது என ஒளவையார் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். இகளுல் அவரது தன்மையும் தகவும் அறியலாகும். மனித சமுதாயத்தில் சிரியர் பொன்னைப்போல் பொலிந்து விளங்குகின்ருர், சீரிய அத் தன்மையில்லாதவர் மண்ணேப்போல் மழுங்கிக் இடக்கின்றனர். என்ன கிலையிலும் பொன் எல்லாராலும் போற்றப் பெறுகின்றது; அன்னவாறே சீரியரும் என்றும் எங்கும் எவ்வழியும் எத்தப் பெறுகின்ருர், பேர் இயல் எல்லாம் பெருகி உள' என்றது அரிய பெரிய மாட்சிகள் பல அப் பெயரில் மருவி யுள்ளமை கருதி. ர்ேமையால் திவ்விய மகிமைகள் விளைகின்றன. விழுமிய குண நலங்களைப் பழகி மக்கள் எல்லாரும் மேலோ சாய் விளங்க வேண்டும் என்பது கருத்து. - ====

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/53&oldid=1325029" இலிருந்து மீள்விக்கப்பட்டது