பக்கம்:தரும தீபிகை 2.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. சீ ர் ைம. 447 உணவுகளில் உப்பு இல்லையாயின் அவை சுவை கெட்டுச் சப்பென்று இருக்கும். காரியங்களில் சீர் இல்லையாயின் அவை விரியம் குன்றி விளிந்து படும். எ க் கொழிலைச் செய்தாலும் எதைப் பேசினலும் அவை சீர்மையுடையனவாய் யாண்டும் சீர் மையுடன் கிலவி வரின் கிறைக்க பயன்கள் விளைந்து வரும். செய்யும் வினைகளை எவ்வகையும் செவ்வையாக நோக்கித் திருந்தச் செய்; பேசுகின்ற வார்க்தைகளை யாதும் பிழைபடாமல் அளந்து அறிந்து விழுமிய கிலையில் இகமாகவும் இனிமையாகவும் பேசு. அவ்வாறு ஆயின் கீ சீரியனுய்ச் சிறந்து கிகழ்வாய். உறுதி நலங்களைக் கருதி உணராமல் காரியங்கள் செய்தலும், கண்டபடி பேசலும் அறிவுகலம் குன்றிய சிறியவர் செயல்களாம்; அவை பெரியவர்களால் மதிக்கப்படா. பிழைபாடான அப் பழிவழிகளில் பட்டு இழியாமல் விழி தெளிந்து எழுங்து சயனும் பயனும் விளேய எதனையும் விய்கைச் செய்க. செயலின் அளவே உயர்நிலை உளதாம். உள்ளம் திருக்கி, உறுவினைகள் கிருங்கி, உரைகள் கிருக்கி உயர் நிலைகள் வளர்ந்து வருவோரே சீர்மையாளராய்ச் சிறந்து யாரும் புகழப் பாரில் விளங்கி கிற்கின்ருர், தன்னைக் கைக் கொண்டவனைச் சீராளன் என்னும் போாள ளுக்கிப் பெருமைப் படுக்கி வருதலால் சீர்மையின் அருமை அறியலாகும். சீர் புரிக்கவன் சீர்த்தி பெறுகின்ருன். - 304. எவ்வழியும் வாழ்வை இனிது புரங்துவரும் செவ்விய நீர்மையே சீர்மையாய்-வெவ்வழி யாதும் மருவா தறிவு நலங்கனிங் து போதும் அழகு பொலிங்,து. (*) இ-ள் வாழ்க்கையை எவ்வழியும் செவ்விதாக்கி யாகொரு துேம் கோமல் யாண்டும் பெருமை புரிந்து அறிவு கலங்கள் கனிந்து அழகு மிகுந்து மிளிர்வதே சீர்மை என வெளியில் விளங்கு ன்ெறது; அவ் வழியில் உயர்ந்து வருக என்பதாம். இது சிறப்புடையன எல்லாம் சீருடையன என்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/56&oldid=1325032" இலிருந்து மீள்விக்கப்பட்டது