பக்கம்:தரும தீபிகை 2.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. தன்னம்பிக்கை. 397 உயிர்களின் கல்வினைகளை நோக்கி அவை ஊக்கி முயலும் அளவே அவள் பாக்கியங்களை உதவி வருகின்ருள். பொதுவாய் விலகி கிற்கும்-அரிய கிருவைக் கனி உரிமை யாக்கி மனிதனை மகிமைப் படுத்தி யாண்டும் என்றும் மேன்மை யாக்கி வருதலால் ஊக்கம் உள்ளத் திரு என வந்தது. தைரிய லட்சுமி என மேலோர் இதனை வழங்கி வருதலால் இதன் கிலைமையும் தலைமையும் நேரே அறியலாகும். எள் அத்தனை ஊக்கத்தால் வெள்ளத்தனைய கிரு வரும் என்றது. அதன் வியத்தகு கன்மையை விளக்கி கின்றது. அணு அளவு ஊக்கம் மலை அனைய செல்வத்தை விளைத்தருள்கின்றது. அளவிடலரிய ஆற்றல்கள் மனிதனிடம் மருவி யுள்ளன. அவ்வுண்மையை உணர்ந்து போற்றிய அளவே அவன் உயர்ந்து விளங்குகின்ருன். ஊக்கம் பேணி ஆக்கம் காணுக. 277. என்று முயற்சி இகங்து தனிங்தாயோ அன்றே இகழ்ச்சி அடைந்தாயால்-கின்றுபின் வாழ்ந்தாலும் செத்த வகையே வலியிழந்து வீழ்ங்தாய் பழியுள் விரைந்து. (எ) இ-ள் முயற்சியை நீ எப்பொழுது கைவிட்டாயோ அப்பொழுதே இகழ்ச்சியை அடைந்தாய்; அதன் பின் உயிர் வாழ்க்தாலும் இறந்து போன படியே இழிந்த பழியுள் வீழ்க் கவனன்ெருய். மனிதனது உயர்ச்சி உள்ளத்தில் உள்ளது; உள்ளம் ஊக்கி முயன்ற அளவே அவன் உயர்ந்து திகழ்கின்ருன். முயலாது சோம்பி யிருந்தால் உயர்வு குன்றி ஒளி இழக்கின்ருன். இகத்தல்=விட்டு நீங்குதல். இகத்து கணிதல் என்றது தொழிலைக் கைவிட்டு மனம் மழுங்கி மடிக்கிருத்தலை. தன் கடமையைக் கவனியாகவனே மடமை வந்து கவித்து கொள்ளுகின்றது; கொள்ளவே அவன் உள்ளம் ஒளி மழுங்கி இழிவுறுகின்றது; அதல்ை உயர்வழிந்து பழி யடைகின்ருன். உரிய கருமம் இனிய கருமம் ஆதலால் அதனை மருவிய போது மனிதனிடம் பெருமையும்இன்பமும் பெருகிஎழுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/6&oldid=1324982" இலிருந்து மீள்விக்கப்பட்டது