பக்கம்:தரும தீபிகை 2.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. சீர் ைம. 453 "எவ்வகை உலகத்துள்ளார் இயல்புடன் ஒழுகுகின்ருர் அவ்வகை ஒழுக்கின் கின்றே அழிவன வருமுன் காத்துத் தவ்வெனும் பழிபாவங்கள் தபுதி எய்தாமை அஞ்சிச் செவ்விய நெறியில் நாளும் செலுத்துக பொறிகள் ஐந்தும். ' இவ்வாறு நெறி புரிந்து வாழின் கிலையான புகழும் தலையான இன்பமும் தழைத்து வரும். அவ் வாவுகளே உரிமை செய்து கொள்க. 307. வெறும்புற்கை யாயினும் வேண்டும் எனக்கொண் டெறும்பும் எதிர்நோக்கி வாழும்-ஒறும்பு வராவகை நாடிநீ வாழ்க வழுவின் இராவகை நீடும் இடர். (எ) இ-ள் எறும்பும் தனக்கு வேண்டிய சிறிய உணவை உரிமையோடு பாதுகாத்து ஒழுகும்; மனிதனுகிய நீ எவ்வழியும் இடர் கோா வகை உரிய பொருள்களைப் பேணி உணர்வுடன் வாழ வேண்டும்; இலதேல் இழிதுயர்கள் நேரும் என்க. வருவதை எதிர் அறிந்து வாழ்வதே சீரிய வாழ்வாம் என முன்பு குறிக்கதைத் தெளிவுறுத்த ஒரு சிறிய பிாாணியை எதிர் காட்டி உறுதி நலனே இது வலியுறுத்துகின்றது. புற்கை = சிறிய சோற்றுப் பருக்கை. எறும்பு மிகவும் சி வி ய பிமாணி. கூட்டம் கூட்டமாய்ச் சேர்ந்து வாழும் இயல்பினது. சுறசுறுப் புடையது. தமக்கு வேண்டிய இசைகளை விாைந்து தொகுத்து வைத்துக் கொள்வதில் இவை சிறந்து கிற்கின்றன. எறும்பும் எதிர் கோக்கி வாழும் என்றது அதன் சிறந்த இயல் பினே கினேங்து. மழை பெய்யும் என்பதை எதிர் அறிந்து கம் குட்டி குஞ்சிகளோடும் இட்ட முட்டைககளயும் கவ்விக் கொண்டு தாம் இருந்த இடத்தை விட்டு வெளியேறி மேட்டு கிலத்தை எ.றும்புகள் அடைந்து கொள்ளும். "பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி முட்டை கொண்டு வற்புலம் சேரும் சிறுதுண் எறும்பின் சில்ஒழுக்கு ஏய்ப்பச் சோறுட்ைக் கையர் வீறுவிறு இயங்கும் இருங்கிளேச் சிரு.அர்த் காண்டும். : (புறம், 178)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/62&oldid=1325038" இலிருந்து மீள்விக்கப்பட்டது