பக்கம்:தரும தீபிகை 2.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454 த ரும தி பி ைக. பண்ணன் என்னும் உபகாரி விட்டில் உறவினர் எல்லாரும் பிள்ளைகளுடன் வந்து நல்ல உணவுகளே உண்டு சோறுடைக் கைய ாாய் வெளியே செல்லும் காட்சி தம் முட்டைகளை வாயில் கவ்விக் கொண்டு எறும்புகள் போவது போல் இருந்தது எனக் கிள்ளிவள வன் என்னும் சோழ மன்னன் இவ்வாறு கூறி யிருக்கிருன். வற்புலம்=மேட்டுகிலம். எழிலி= மழை. மழை பெய்யும் காலத்தை முன்னுற அறிந்து தமக்கு அல்லல் உருத நல்ல இடத்தை ஒல்லையில் தேடிக் கொள்ளும் வல்லமை எறும்புகளிடம் அமைந்திருத்தலை இ த ைல் உணர்ந்து கொள் ன்ெருேம். எ.மறும்புகள் முட்டைகளை எடுத்துக் கொண்டு வேறிடம் செல்வதைக் கண்டால் கட்டாயம் மழை பெய்யும் என்பதை மக்கள் உறுதி செய்து கொள்ளுகின்றனர். பின் விளைவதை முன்தெளிவித்து மனிதர்க்கு அறிவுகாட்டும் நன்னய நாகரீகம் எறுபிடை இசைத்துள்ளமை வியந்து கொள்ள வுரியது. 'வாராக் காலத்து வினைச்சொற் கிளவி இறப்பினும் நிகழ்வினும் சிறப்பத் தோன்றும் இயற்கையும் தெளிவும் கிளக்கும் காலே. ' (தொல்காப்பியம், வினே இயல், 48) எதிர் காலத்திற்கு உரிய வினைச்சொல்லின் பொருள், தெளிவு குறித்து வருங்கால் இறந்த காலச் சொல்லானும், கிகழ் காலச் சொல்லானும் வழங்கலாகும் என்பது இச் சூக்கிாத்தின் விதி. இதன் உாைக்கு உதாரணம் காட்டிய உரை ஆசிரியர் எல்லாரும் இந்த எறும்பையே விரும்பிக் குறித்திருக்கின்றனர். ‘எறும்பு முட்டை கொண்டு தெற்றி ஏறின் மழை பெய்தது; மழை பெய்யும் என்பது தெளிவு. ’’ என இளம்பூாணர், சேன வுாையர், நச்சினர்க்கினியர் முதலிய அனேவரும் எழுதியுள்ளமை யால் இதன் பழமையும் வழி முறைமையும் தெளிவாம். எதிர் நோக்கி வாழும் திறத்தில் எறும்பு இங்ானம் சிறங்கி ருத்தலால் அஃது ஈண்டு எடுத்துக் காட்ட சேர்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/63&oldid=1325039" இலிருந்து மீள்விக்கப்பட்டது