பக்கம்:தரும தீபிகை 2.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. ர்ே ைம. 457 309. ஒத்த மனிதர் உயர்வாக எண்ணுவது சித்தம் உயர்ந்த செயலேகாண்-சித்தம் புனிதமாப் பேணிப் புரங்து வருக இனியசீர் எய்தும் இவண். (க) இ-ள் மக்கள் குழுவில் ஒருவனே உயர்ந்தவன் என எண்ணுவது அவனுடைய உள்ளத்தின் தகுதியை நோக்கியே ஆதலால் மனத் தைப் புனிதமாகப் போற்றிவரின் அரிய பல மேன்மைகள் உரிமை யுடன் காமாகவே விாைங்து வந்து சேரும் என்பதாம். இது உயர்ச்சி விளைகின்ற மூல கிலையை உணர்த்து ன்ெறது. உருவத் தோற்றம் முதலிய பிறப்பு கிலைகளில் ஒரு கிகா னவாய் அமைந்துள்ள மனிதர் சில சிறப்பு கலங்களால் வேறுபாடு பெற்று மேன்மையான மகிமைகளை மேவி யுள்ளனர். அங்ானம் உயர்ந்துள்ளமைக்குக் காாணம் அவருடைய உள்ளப் பண்பே யாம். புறத்தில் விரிந்துள்ள ஆடம்பாங்களால் ஒரு மனிதனுக்கு உண்மையான மதிப்பு வருவதில்லை. எண்ணக் கின் தாய்மை அளவே அவன் ஏற்றமாய் மதிக்கப் படுகின்ருன். மனம் உய மனிதன் உயர்கின்ருன். பெரியோர், மேலோர் என்னும் புகழ்ச்சிமொழிகள் எல்லாம் உள்ளத்தின் பரிபக்குவங்களை நோக்கி எழுந்தன. பெருமை மேன்மை என்னும் பண்புரிமைகளை மருவி வந்துள்ளமையான் அவர்கம் அருமையும் அமைதியும் அறியலாகும். 'சித்தம் உயர்ந்த செயலே காண்’ என்றது உயர்ச்சியின் மூலகாாணத்தை உய்த்துனா வ ங் த து. உன் உள்ளத்தைத் தாய்மை ஆக்கு; உலகம் உன் கைவசமாகும். தாய்மையுள் எல்லா மகிமைகளும் தோய்ந்திருக்கின்றன. அது வா யாவும் வருகின்றன. மனம் புனிதமாய் உயர்ந்தபொழுது மனிதன் மகான் ஆகின் முன். அது மலினமாய் இழித்துபடின் அவன் இழிமகளுய்க் கழித்து போகின்ருன். பெருமையும், சிறுமையும், இன்பமும், அதுன்பமும் மனத்தின் நலம் தீங்குகளால் முறையே மருவி வருதலால் அதன் கிலைமையும் தலைமையும் நீர்மையும் அறியலாகும். 58

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/66&oldid=1325042" இலிருந்து மீள்விக்கப்பட்டது