பக்கம்:தரும தீபிகை 2.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468 த ரு ம தி பி கை. பிற மாண்புகள் யாவும் உடல் உறுப்புக்கள் போல்வன; ஒழுக்கம் உயிர் போல்வது ஆதலால் இஃது இல்வழி அவை அனைத்தும் வை அடைய சேர்கின்றன. “Character is human nature in its best form.” 'மனித இயல்பில் ஒழுக்கம் மிகவும் உன்னதமானது' என் லும் இது ஈண்டு எண்ணத் தக்கது. ஒழுக்கத்தைக் குறித்து மேல் காட்டார் கருதியுள்ளமையை இதல்ை அறிகின்ருேம். ஒழுக்கம் உயிரைப் புனிதப் படுத்தி வருதலால் அதனை யுடையவன் மனிதருள் தெய்வமாய் இனிது விளங்குகின்ருன். உயர்க்க குடியில் பிறந்தவன் ஆயினும் ஒழுக்கம் இலனேல் அவன் இழிந்து படுகின்ருன். காழ்க்க குடியில் பிறங்கிருப்பினும் ஒழுக்கமுடையஞயின் அவனே உ ல க ம் உவங்து கொண்டாடு ன்ெறது. ஒழுக்கம் உயர்குலம் என்னும் பழமொழியாலும் அதன் விழுமிய நிலைமை வெளியே தெளிவாயுள்ளது. ஒழுக்கம் உடைமை குடிமை, இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும். (குறள், 133) இழுக்கத்தின் மிக்க இழிவில்லை; இல்லை ஒழுக்கத்தின் மிக்க உயர்வு. (பழமொழி, 64) தாழ்ந்த வருணத் துதித்தவரும் தக்கோராவர் ஒழுக்கத்தால்: வீழ்ந்த ஒழுக்கத் தாரிழிவர் மேலாம் வருணத் துதித்திடினும்: சூழ்ந்து துணையாம சிறப்பின்பம் சுரக்கும். அதல்ை உயிர்கனினும் வாழ்ந்த ஒழுக்கம் ஒம்பிடுக வழுக்கின் இடும்பை யேதருமே. (விநாயக புராணம்) ஒழுக்கத்தின் உயர்வும், அ. தி ல் வழுவினல் உளவாகும் இழிவுகளும் இவ்வாறு விழி தெரிய நூல்கள் விளக்கி யுள்ளன. ஒழுக்கம் படையானேல் அத்தனேயும் பாழ். என்றது. இதன் கத்துவத்தை உய்த்துனா வக்கது. ஒழுக் கம் இன்மையால் பாவம் புகுகின்றது; அதனல் கண்ணியிருக்த கலன்கள் எல்லாம் நாசம் அடைந்து போகின்றன. ஒழுக்கத்தால் புண்ணியம் வளர்ந்து வருகின்றது; வரவே அதனை உடையவனுக்கு எல்லாச் செல்வங்களும் பல்வகைச் சிறப்புக்களும் எளிதில் வங்து கைகூடுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/77&oldid=1325055" இலிருந்து மீள்விக்கப்பட்டது