பக்கம்:தரும தீபிகை 2.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. தன்னம்பிக்கை. 399 இது, செயல் வகைகளின் கிலைமைகளே உணர்த்துகின்றது. மக்கள் எல்லாரும் பாடு படுகின்றனர்; அப் பாடுகள் பல வகையின வாய் விரிந்து வெளியே தொழில்கள் என வருன்ெறன. அவர்.அவர் கிலேமைக்குத் தக்கபடியே உழைப்பும் பிழைப்பும் மனிதரிடம் தழைத்து கிற்கின்றன. அவை பலவாறு பல நிலைகளில் பாவி யிருப்பினும் சில வகையுள் அடக்கிக் கொள்ளலாம். 1. தேக முயற்சி. 2. மன முயற்சி. 3. அறிவு முயற்சி. 4. ஆன்ம முயற்சி. என இங்கனம் நான்காகக் குறித்தது அவற்றின் பாங்கும் பயனும் தெரிய. கரும கிலைகள் கருதி உனா வுரியன. கேக முயற்சி ஆவது உணர்வு கலம் புணாாமல் உடலளவில் உழைப்பது. மாடுகள் போல் பாடுபடுவதால் இது மாட்டுப் பாடு எனப்படும். அறிவு கலவாமையால் பரிபவம் அதிகமாயது. மன முயற்சி ஆவது கொஞ்சம் சிந்தனையோடு செய்யுங் தொழில். நெசவு வாணிகம் முதலியன இதனுள் அடங்கும். அறிவு முயற்சி என்பது கலையறிவோடு கலந்து புரிவது. மந்திராலோசனை, கியாயவாதம், திே தெளிதல், ஒவியம்புனேகல், காவியம்வாைதல் முதலியன இதில் மருவி வருவன. ஆன்ம முயற்சி என்பது உலக கிலைகளை மறத்து சமாதி $&ు யில் அமர்ந்து தன்னை அறிதல். சேகம், மனம் முதலியன யாவும் கடந்து பாமான்மாவுடன் சீவான்மா ஒன்றி கிற்கும் கிலையது ஆதலால் இது யோக முயற்சி என வந்தது. குறித்த நான்கும் ஒன்றை விட ஒன்று மிகவும் உயர்த்தது. ஒரு காள் முழுவதும் உழைக்கும் தேக முயற்சிக்கு ஒரு பொன் கூலி ஆல்ை, அதே அளவுள்ள மனமுயற்சிக்குப் பத்துப் பொன்; அறிவு முயற்சிக்கு நாறு பொன்; ஆன்ம முயற்சிக்கு ஆயிரம் பொன் ஆம். முயற்சியின் வகை அளவே உயர்ச்சியும் பயனும் உளவாகின்றன. எந்த எந்த நிலையில் கின்று முயல்கின்ரு னே அந்த அந்த வகையிலேயே உலகிற்கு அவன் பயன் படுகின் முன். இனவுரிமைகளைத் தழுவிச் சமுதாயங்கள் இயங்குகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/8&oldid=1324984" இலிருந்து மீள்விக்கப்பட்டது