பக்கம்:தரும தீபிகை 2.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. ல ம். 477 நல்ல அழகன், உயர்க்க கல்விமான், சிறந்த செல்வன் எனப் பிறக்து பேர் பெற்ற கிம்பது பெருமையே எனினும், இம் மேன் மைகள் யாண்டும் குன்ரு மல் மேலும் விளங்கி ஒளி வேண்டு மாயின் உறுதியான சீலம் உரிமையாக வேண்டும். அ ரு ள் அமைக்க என்றது சீலத்தின் பொருள் பொதிந்து வந்தது. தயை யும் கண்ணளியும் சீ ல த் தி ன் வண்ணங்களாய் வளர்ந்திருக் கின்றன. அருள் கனிய விழுமிய சீலனுய் வெளி மிளிர்கின்ருன். ஒழுக்கம் ஆன்ம ஒளியாய்ப் பான்மை படிந்திருத்தலால் அது மற்ற மாட்சிகளுக்கெல்லாம் கா ட் சி தங்கருள்கின்றது. வெற்றியும புகழும் விழுமிய இன்பமும் அதனுல் விளைந்து வரு கின்றன. அகன் ஆற்றலும், பயனும் அளவிடல் அரியன. உடலுக்கு உயிாபோல் உயர்கலங்கள் எவற்றிற்கும் ஒழுக்கம் ஆகாய மாய் அமைந்திருக்கிறது. அதனை உள்ளுற மருவியுள்ள அளவுதான் கல்வி செல்வம் அதிகாசம் ஆட்சிகள் யாவும் மாட்சியும மதிப்பும் வலிமையும் மகிமையும் வாய்ந்து கிம்கின றன. “The strength, the industry, and the civilisation of nations-all depend upon individual character.” (Smiles) “தேசத்தின் நாகரீகம், கொழில், வலிகள் எல்லாம் மனித ஒழுக்கத்தைச் சார்ங்கே இனிது செழித்திருக்கின்றன’’ என ஸ்மைல்ஸ் என்பவர் இங்கனம் கூறி யிருக்கினரும். விளைவுக்கு வித்தைப் போல் சனசமுதாயத்தின் மேன்மை களுக்கு ஒழுக்கம் மூலகாரணமா யுள்ளது. அ. தி ல் இழுக்கம் அடையின் அம் மரபு பழிக்கப்படும். கல்வியில் பெரியன, செல்வக்கில் சீமான் என வெளியே பெருகி கிம்பினும் சீலம் இல்லையேல் சிறியன் வறியன் எனக் சீசழிய கோகினருன். பண்பு இன்றேல் பலவும் பாழாகின்றன. சிறந்த பண்டிதன், கிறைந்த செல்வன், உயர்ந்த குலத்தன், பெரிய அதிகாரி என்பதை விட நல்ல சீலவான என ஞாலம் சொலலப் பெறுவது ஒருவனுக்கு மேலான மகிமையாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/86&oldid=1325064" இலிருந்து மீள்விக்கப்பட்டது