பக்கம்:தரும தீபிகை 2.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484 த ரும தி பி ைக. ஒழுக்கம் இன்றி இழுக்கங்கள் புரிந்து வாழ்பவர் மிரு கங்களே என இதில் பழித்திருத்தல் அறிக. மட்டு=கள். பிற வற்றின் புண் என்றது புலாலை. அறிவை மயக்கிச் சிறுமை விளைக் கும் பழி உணவுகளை ஒழித்தலே ஒழுக்கத்தின் முதல் படி என இது உணர்த்தி யுள்ளது. "மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும் கயக்கறு மாக்கள் கடித்தனர் கேளாய்! பிறந்தவர் சாதலும் இறங்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்ற துண்மையின் நல்லறம் செய்வோர் கல்லுலகு அடைதலும், அல்லறம் செய்வோர் அருகரகு அடைதலும், உண்டு என உணர்தலின் உரவோர் களைந்தனர், ! (மணிமேகலை, 16) புலை கொலைகளைத் தவிர்ந்து ஒழுகுவதே கலையாய ஒழுக்கம் என்பதை இதல்ை அறிந்து கொள்ளுகின்ருேம். தன் உயிர்க்கு இன்பம் தேடுகின்ற மனிதன் எவ் வுயிர்க்கும் யாதொரு துன்பமும் கோாமல் ஒர்ந்து ஒழுக வேண்டும் என்பது தேர்ந்த விதியாம். பழித்தன ஒழித்தல் சீலம் எனச் சீலத்திற்கு இலக்கணம் வகுத்திருக்கும் அழகை ஆய்ந்து பார்க்க. ஒழுக்கத்தைத் தம் உயிரினும் அருமையாக விழுமியோர் போற்றி வருவர் ஆதலால் எதேனும் பிழை கேரின் அவர் உள்ளம் .திடித்து விடுகின்ருர்.

  • சிறிதே வழுவினும் குலைவர் என்ற தல்ை அவரது

விழுமிய நிலைமை வெளியாய் கின்றது. சீலம் உடையாசைப் பால் என்றது அவரது கன்மையும் என்மையும் தெரிய. பால் போல் ஒழுக்கத்தவர் என மேல் வந்துள் ளதையும் இங்கே சிக்தனை செய்து கொள்க. பாலில் ஒரு துளி புளி விழுந்தாலும் அது கிலை கிரிந்து போம்; மோரில் எவ்வளவு படினும் எதும் கிரியாது. சீலமுடைய மேலோர் சிறு வழு உறினும் குலை குலைந்து விடுவர்; அஃது இல்லாத கீழோர் எவ்வளவு பிழைகள் நேர்க் தாலும் பாதும் கவலாமல் அகங்களித்து கிம்பர். அங் கிலைமைகளைக் காட்சிப் படுத்தித் தெளிவாக விளக்க உவமைகள் வங்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/93&oldid=1325071" இலிருந்து மீள்விக்கப்பட்டது