பக்கம்:தரும தீபிகை 3.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. தொ ழி ல் 925 சிறிது சிறிதாக ஈட்டிப் பெரும் பொருள் ஆக்கிக் தொழில் முயற்சியினல் கம்மியரும் உயர்ந்த யானைமேல் ஊர்ந்துவானேர்வர் என இது காட்டியிருக்கும் குறிப்பைக் கருத்துளன்றிக் காண்க. கம்மியர் என்ற த கச்சர் சட்டார் கொல்லர் முதலிய கைத் தொழிலாளிகளை. கூலி வேலைகளைச் செய்கின்றவரும் விடாமுயற்சி யுடையமாயின் பெரிய அரச கிருவினை அடையலாம் என்பதை இதல்ை அறிவுமத்தினர். உயர்க்க குலத்தில் பிறக்கிருந்தாலும் தொழில் புரியாாாயின் அவர் இழித்து படுவர் காழ்க்க கலையினாாயினும் தொழிலைக் கைக்கொள்ளின் அவர் யானே கட்டி வாழும்படியான மேன்மையை அடைக்க விளங்குவர். இவ்வுண்மைகளை விளக்க உவமைகள் வர்தன. அம்மி சிேல மிகது வந்தது; சாைக் கொடி அதனுள் ஆழ்க்கிருத்தது என்ற த உயர்க்கோர் செல்வத்தில் மூழ்கி சன்கு வாழாமல மேலே இழித்து கின் மதையும் தாழ்த் தோர் செழித்து வாழும் கிலைமையையும் இங்கணம் உணர்த்தியருளினர். அம்மி போன்ற வவியரும் தொழிலைக் கைவிடின் மெலியாய் இழிவர்; சுமை அனைய மெலியரும் முயன்.அவரின் உயர்த்து திகழ்வர் என்க. முயற்சி திருவினே ஆக்கும்; முயற்றின்மை இன்மை புகுத்தி விடும். (குறள், 616) என்னும் உண்மை ஈண்டு ஊன்றி உனா வுரியது. சவியாத உழைப்பு மனிதனே உன்னத நிலையில் உயர்த்து கின்றது. மடியின்றி காளும் உறுதியோடு முயன்று வருபவனிடம் தெய்வ சகாயங்கள் பெருகி வருகின்றன. “To the persevering mortal the blessed immortals are swift.” (Zoroaster) இடைவிடாத முயற்சியாளனே உவல்து நோக்கித் தெய்வங் கள் விாைத்த உதவி புரிகின்றன’’ என ஜொாாஷ்டர் என்னும் பாரசீககேசத்து மகான் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். உழைத்தவன் உயர்ந்து வாழ்கின்ருன், உழையாதவன் இழிந்து தாழ்கின்ருன். தாழ்ந்து படாமல் வாழ்த்து மகிழ விரும்பின் தொழிலை எவ் வழி யும் ஒருவன் சூழ்ந்து கொள்ள வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/154&oldid=1325908" இலிருந்து மீள்விக்கப்பட்டது