பக்கம்:தரும தீபிகை 3.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. ம ற கி. 1011 எண்ணங்கள் சீவ ஒளிகளாய் எழுகின்றன. அவை பல வழி களில் வெளி வருகின்றன. உலக கிலைகள் பலவற்றையும் எண்ணி அறிகின்ற மனிதன் கன் உண்மை கிலேயை யாதும் அறியாமல் மறந்து விடுவது பெரிய மாய மயக்கமாயுள்ளது. தான் யார்? என் இங்கு வந்தேன்? என்ன செய்ய உரியேன்? முன்னும் பின்னும் பாதும் தெரியாமல் இன்னவாறு வந்துள்ளே னே! என எவன் சிக்தனை செய்ய சேர்கின்ருனே அன்றே அவன் தன்னை அறியத் தலைப்பட்டவன் ஆகின்ருன். தத்துவஞானி சிவன்முத்தன் என மேவி வருபவர் எவரும் இன்த வித்தக கிலையிலிருந்து தான் விளைந்து வருகின்றனர். எதை அறிய வேண்டுமோ அதை அறிவது புனித ஞானம் ஆகின்றது; ஆகவே அதனையுடையவன் புண்ணியவாய்ைத் தனி மகிமை படைகின்ருன். முனிவன், யோகி என்னும் பெயர்கள் உண்மையான மனன சீலங்களை உணர்த்தி வருகின்றன. எளிமையும் இனிமையுமான இக்க கிலையில் எவருடைய சிக் தனையும் செல்வதில்லை; கவருன வழிகளிலேயே யாவரும் காவி ஒடுகின்றனர். ஆவி அலமந்து அவலமாய் விடுகின்றனர். உலகக் களிப்புகளிலேயே உழன்று கிரித்து பல பிறவிகளி லும் பழகி வந்துள்ளமையால் அக்கப் பழக்க வாசனைகள் மணி த&னப் பாழான வழிகளில் இழுத்துப் போகின்றன. அசுத்த வாசனைகள் மக்களே.அவலகிலேயில் ஆழ்த்துகின்றன. சுத்த இயல்புகள் உத்தம கிலையில் உயர்த்துகின்றன. எல்ல நீர்மைகளையுடையவர் சித்த சாங்காய்ச் சிறந்து திகழ் கின்ருர், அவரது அறிவு புனிதமாயுள்ளமையால் ஒளி மிகுந்து உண்மை நிலையைத் தெளிவாக உணர்ந்து கொள்கின்றது. நிலையில்லாத அகித்தியப் பொருள்களை கிலை என்.று கொள் வது புல அறிவாய்ப் புன்மையடைகின்றது. கிலேயுடைய கிததியப் பொருளை கிணந்து தெரிவது உத்தமமான உண்மையறிவாய் உயர்ந்து நன்மைகள் பல சாக்து ஈலம் பல பெறுகின்றது. 1. விவேகம், 2. கிராசை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/240&oldid=1325994" இலிருந்து மீள்விக்கப்பட்டது