பக்கம்:தரும தீபிகை 3.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51. இ த ம். 106.7 பாயின் அவர் திவ்விய மகிமைகளை அடைய கேர்கின்றனர். கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்னுற்றும் கொல்லோ வுலகு (குறள், 211) யாதொரு கைம்மாறும் கருதாமல் மேலோர் உதவி புரிவர்; அவர் மாரியனயர் என்று இது கூறியுளது. இனிய உபகாரிகளை வையம் வானம் என வாழ்த்தி வருகிறது. மோரி அன்ன வண்மைத் தேர்வேள் ஆயைக் காணிய சென்மே." (புறம், 183) ஆய் என்னும் குறுகில மன்னனுடைய உபகார நீர்மையை மோசியார் என்னும் சங்கப் புலவர் இங்கனம் பாராட்டியுள்ளார். 'ஒவாது ஈயும் மாரி வண்கைக் கடும்பகட்டு யான நெடுங்தேர் அஞ்சி' (குறுக்தொகை 91) அதிகமான் நெடுமான் அஞ்சி என்பவனது சகை கிலையை ஒளவையார் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். மாரி என்று மனமகிழ்க் து புகழ்ந்துள்ளமையால் அவரது நீர்மைகளை கினேன் து கொள்கிருேம். பாரி வள்ளலை மாரி என்று கபிலர் உவந்து கூறியுள்ளார். ஆரியன் அவனே நோக்கி ஆருயிர் உதவி யாதும் காரியம் இல்லான் போனன் கருணையோர் கடன்மை ஈ கால் பேரிய லாளர் செய்கை ஊதியம் பிடித்தும் என்ர்ை; மாரியை நோக்கிக் கைம்மாறு இயற்றுமோ வையம்என்ருன். (இாாமாயணம், நாகபாச, 271) இக்இா சித்து ஏவிய நாகபாசக் கால் மயங்கிக் கிடக்க இலக் குவனேக் கருடன் வந்து எழுப்பிப்போனன். அப்பொழுது அவனே கோக்கி இராமன் இப்படி உருகி உவந்து கூறியுள்ளான். கவியின் சுவையைக் கருதி உணர வேண்டும். எல்லோர் தமக்கும் இனிது உதவலன்றியே நல்லோர் தமக்குதவி காடாரே-வல்லதரு நாமகிதி மேகம் நயந்துதவ லன்றியே தாமுதவி நாடுமோ சாற்று. (நீதிவெண்பா 92) பெருங்தன்மை கிறைக்க உயர்ந்த உபகாரிகளுடைய சீர்மை ர்ேமைகள் இங்கனம் புகழ்ந்து போற்றப்பட்டுள்ளன. சீரிய உதவி கிலையில் மாசி தலை சிறந்துள்ளமையால் அது முதலில் ஐக்கது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/296&oldid=1326053" இலிருந்து மீள்விக்கப்பட்டது