பக்கம்:தரும தீபிகை 3.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1124. த ரும தி பிகை. கண்ணுேட்டம் என்னும் சொல் கருனைப்பண்பு உடையது ஆதலால் அது புண்ணிய நீர்மையாப்ப் பொலிந்து திகழ்கின்றது. பிற உயிர்கள் துயருறுவதைக் கண்டால் உடனே உளம் உருகி உதவி புரிய நேர்வகே கண்ணுேட்டமாம். கண் ஒடி இரங்குவது கண்ணுேட்டம் என வங்கது. இந்தப் புண்ணிய நீர்மையுடையதே உண்மையான கண் ஆம், இக் தன்மை இல்லையானுல் அது புன்மையான ஒரு புண் என்று இகழ்ந்து தள்ளப்படும். கண்ணிற்கு அணிகலம் கண்ணுேட்டம்; அஃதின்றேல் புண்என்று உணரப் படும். (குறள், 575) கானும் கண்ணுக்கு ஒரு பூண் அணிந்து கருணைக் காட்சி யைத் தேவர் இவ்வண்ணம் காட்டி யிருக்கிருர். காது கழுத்து கை கால் விரல் முதலிய அவயவங்களில் அணிகலங்களை அழகுக் காக அணிந்து திரியும் மானிடர்க்கு இங்கே ஒரு புண்ணிய அணி கலனைக் கண் எதிரே காட்டி எண்ணியுணரச் செப்துள்ள திறம் இன்ப மிகச் செய்கிறது. எவனுடைய கண் இரங்கி யருளுகின்றதோ அவனே நல்ல கண்ணுடையவன்; அல்லாககண் பொல்லாக குருடே என்னுமல் புண் என்று சொன்னது அகன் மேல் உள்ள வெறுப்பையும் அருவருப்பையும் வெளிப்படுத்தியது. கருணை புரியாக கண் கொடுமையாப்ப் பழி பாவங்களை விளைத்துத் கன்னே யுடையானுக்கு இருமையும் துன்பம் கருகின் றது; கருணை புரியும் கண் இனிமையாப்ப் புகழ் புண்ணியங்க ளைச் செப்து என்றும் இன்பம் அருளுகின்றது. கருதிக் கண்ட பின்பே உள்ளம் உருகி உகவும் ஆதலால் கண்ணுேட்டமும் கருணையும் வித்தும்விளைவும்போல் ஒத்துள்ளது. பண்ணுக்கு வாம்பரித்தேர் ஆகடலும் பணிந்துபசு பதியை நோக்கி மண்ணுக்குக் கவம்புரியும் கனஞ்சயற்குக் கோடையினும் மதியம் போன்ருன் எண்ணுக்கு வரும்புவனம் யாவினுக்கும் கண்ணுவான் இவனே அன்ருே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/353&oldid=1326114" இலிருந்து மீள்விக்கப்பட்டது