பக்கம்:தரும தீபிகை 3.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1148 த ரும தீபிகை. இமயச் சாரலில் ஒரு தங்கப் பாளம் கிடந்தது; முனிவர் சிலர் கண்டு வந்து மகத மன்னனிடம் சொன்னர். அரசன் அகனக் கொண்டு வரும்படி செய்தான்; அது வந்தது; மன்னன் மகிழ்ந்து பார்த்தான்; இது அரிய புண்ணிய சீலர்க்கு உரியது என அகன் மேல் எழுதியிருந்தது. வேங்கன் வியந்து நின்றன். கரும வான்கள் எனக் கன் நாட்டில் பெருமை பெற்றுள்ளவர் பாவ ரையும் ஆராய்ந்து அழைத்தான்; அனைவரும் வந்தனர். அரச சபையில் கூடினர். அவருள் உயர்ந்த புண்ணியவான் யார்? என எண்ணி நோக்கி இறுதியில் ஒருவனே எகமாக் தேர்ந்து எடு த்தனர். கன் செல்வம் முழுவதையும் கல்வி நிலையங்களுக்கும், வைத்திய சாலைகளுக்கும், அன்ன கானங்களுக்கும் அள்ளிக் கொடுத்தவன் எனத் தெள்ளி எடுத்த அவனே அரசன் உவந்து நோக்கி அங்கக் கங்கக்கட்டியை எடுத்துக்கொடுத்தான்; அவன் கையில் வாங்கினன். வாங்கவே அது ஈயம் ஆயது. யாவரும் மரு ண்டு திகைத்தார்;அவனும்வெருண்டுநாணினன்.மன்னன்மறுகிப் பின்னர் ஒருவனிடம் அப் பொன்னின் பொதியை உரிமையாகக் கந்தான். பெரிய கரும சீலன் எனப் பேரும் சீரும் பெற்றிருக்க அவன் கையில் பட்டவுடனே அது இரும்பாப் மாறியது. புண் ணிையவான்கள் எனக் கண்ணிடம் கொ ண்டிருக்க யாரும் வந்து தொட்டனர்:கொடவே அது பிக்களே செம்பு வெண்கலம் வெள்ளி என இழிந்து மாறியதேயன்றி ஒருவரிடமாவது தன்னிறம் கொ ண்டு அப் பொன் பொதி நின்றிலது. அரசன் அயர்ந்து கின்ருன். இறுதியில் அங்கோர் உழவன் வக்கான், மிகவும் எளியவன்; காட் டுப் புறத்தான். அந்தக் கூட்டக்கைக் கண்டதும் என்ன இது என உன்னி அடைந்தான். அருகு வரவே அந்தக் தங்கப் பாளத் திலிருந்து ஒரு பேரொளி எழுந்து அவன் மேல் நேரே விசியது. யாவரும் வியந்தனர். மன்னன் மகிழ்ந்து அப் பொன்னின் பொதியை அன்னவனிடம் கொடுக்கான்; அவன் கையில் வாங்கி ன்ை முன்னேயிலும் பன்மடங்காக அது ஒளி வீசி நின்றது. வேக்கன் அவனே உவந்து உபசரித்துப் புண்ணிய சீலன் என்று புகழ்ந்து போற்றினன். தங்கள் பேரும் சீரும் உலகம் அறிய வேண்டும் என்று முன்னவர் எல்லாரும் ஆடம்பரமாகத் தருமங்களைச் செய்தனர்; இவன் யாருக்கும் தெரியாமல் பசித்தவர்களுக்கு அன்னம் உதவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/377&oldid=1326138" இலிருந்து மீள்விக்கப்பட்டது