பக்கம்:தரும தீபிகை 3.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாற்பத்தைந்தாம் அதிகாரம் த ைச. அஃதாவது பாழான ஆசையின் பழி நிலை. ஈன இச்சை மான வாழ்வை மாக படுத்தும் ஆதலால் அக்க இழிவில் இழியா மல் ஒழுகுக என உணர்வு கூறுகின்றது. வாழ்வின் உயர் நலனே உணர்த்துகின்றமையால் வாழ்காணின் பின் இது வைக்கப்பட்டது 441. ஒசைக் கடல்சூழ் உலகில் உயிரெல்லாம் ஆசைக் கடல்விழ்ங் தலறுமால்-பேசரிய துன்பம் அடைந்தும் தொடர கினேங்திலதே இன்பம் இருக்கும் இடம். (க) இ-ள் அலைகளை விசி முழங்குகின்ற கடல் சூழ்ந்த உலகில் உடல் சூழ்ந்த உயிர்கள் யாவும் ஆசைக் கடலில் விழ்ந்து அலமருகின் தன; சொல்ல முடியாக கொடிய துன்பங்களை அனுபவித்தும் நல்ல இன்ப நிலையை நாடியுணாாமல் இருக்கின்றன என்பதாம். உயிர் வாழ்வு பலவகை மருள்களில் படிந்து அலேயிடைத் திரும்புபோல் கிலைகுலைந்து அலைந்து மயங்கி இயங்கி வருகின்றது. பசியும் காமமும் உடலையும் உயிசையும் தொடர்ந்து அடர்த்து வருதலால் சிவ கோடிகள் ஒயாது ஒடி உளேத்த உழலுகின்றன. 'பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்க” (மணிமேகலை) என வாழ்க்கிக் செய்வத்தை வழிபாடு செய்துள்ளமையால் வையத்தவர்களின் வாழ்க்கைக் கவலைகளை நன்கு அறியலாகும். மனிதன் முன்னும் பின்னும் எண்ணி அறியும் இயல்பினன் ஆதலால் எண்ணரிய இச்சைகள் அவன் உள்ளத்தில் இடம் பெற லாயின. அவற்றுள் ஆசை என்பது உச்ச கிலையில் கொச்சையாய் ஒங்கியுள்ளது. அளவு மீறியது அவலமாய் மாறியது. கினைவு, எண்ணம், விருப்பம், வேட்கை, ஆசை என்னும் இவை ஒன்றினும் ஒன்று கிளர்த்து வளர்ந்து உயர்ந்து கிற்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/79&oldid=1325833" இலிருந்து மீள்விக்கப்பட்டது